272 பெரிய புராண விளக்கம்-7 திருச்சிராப் பள்ளி மலையும்-திருக்கோயில் விளங்கும் திருச்சிராப் பள்ளியில் உள்ள மலைக்கும். கற்குடியும்-திருக் கற்குடிக்கும். நலம்-பலவகை நன்மைகளை. கொள். கொண்ட அவையாவன: நீர் வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம் முதலியவை. செல்வ-செல்வர்கள் வாழும்; திணை மயக்கம், த்:சந்தி. திருப்பராய்த் துறையும் -திருப்பராய்த் துறைக்கும் எழுந்தருளி. தொழுவான். தாயு மானேசுவரரையும், முத்தீசுவரரையும், பராய்த்துறை நாதேசுவரரையும் வணங்கும் பொருட்டு. நண்ணினார். திருவானைக் காவிலிருந்து அந்த நாயனார் எழுந்தருளினார். திரு எறும்பியூர்: இது சோழ நாட்டில் உள்ள சிவத் தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் எறும்பீசுவரர். அம்பிகை நறுங்குழல் நாயகி. இந்தச் சிவத்தலம் திருவெறும் பூர் என இக்காலத்தில் வழங்கும். திருச்சிராப் பள்ளிக்குக் கிழக்குத் திசையில் ஆறே கால் மைல் தூரத்தில் இது உள்ளது. தேவர்கள் எறும்புகளினுடைய உருவங்களை எடுத்துக் கொண்டு வந்து பூசித்த தலம் இது. திருக்கோயில் மலை மேல் இருக்கிறது. சிவலிங்கப் பெருமான் வடபுறமாகச் .சாய்ந்திருக்கிறார். பழைய அம்பிகை பின்னம் அடைந்திருப் பதால் வெளியில் ஒரு பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். பிரம தேவனும், நைமி சாரணிய முனிவர்களும் பூசித்த தலம் இது. இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: ' விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே கரும்பின் ஊறல்கண் டாய்கலந் தார்க்கவன் இரும்பின் ஊறல் அ ஹாததோர் வெண்தலை எறும்பி யூர்மலை யான்னங்கள் ஈசனே இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு:
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/278
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
