பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பெரிய புராண விளக்கம்-2 திருச்சிராப்பள்ளி: இது சோழநாட்டில் காவிரியாற்றி தென்கரையில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் للاساسا (68 ليبي கொண்டிருப்பவர் தாயுமானேசுவரர். அம்பிகை மட்டுவார். குழலம்மை: சுகந்த் குந்தளாம்பிகை எனவும் வழங்கும். - மூன்று தலைகளைப் பெற்றவனாகிய திரிசிரன் என்னும்அரக்க வழிபட்டமையால் இந்தத் தலத்துக்குத் திரிசிராப்பள்ளி என்னும் பெயர் வந்தது. இந்தத் தலமும் தட்சிண கைலாசம் என வழங்கும். திருக்கோயில் ஒரு மலைமேல் இருக்கிறது. தாயுமானேசுவரரிடம் பக்தி மிகுதியாகக் கொண்டிருந்த, ஒரு பெண்மணி சருப்பமாக இருந்து பிரசவ காலத்தில் காவிரி: யாற்றில் வெள்ளம் பெருகி வந்தமையால் தன்னுடைய அன்னை வந்து உதவி முடியாமல் இருந்தமையால் அவள் துன்பப்படும் சமயத்தில் தாயுமானே சுவர ரே அவளுடைய இயைப் போல் எழுந்தருளி மருத்துவம் பார்த்தருளி. ஆதரித்த தலம் இது. இதனால் சிவபெருமானாருக்கு. தாயும் ஆனவர் மரி துர் பூதேசுவரர் என்னும் திருநாமங்கள் வந்தன. தாயுமான சுவாமிகள் எழுந்தருளியிருந்த தலம்.இது - மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரினுடைய திருக். ,டில் விளங்குகிறது. அங்கிருந்து பார்த்தால் திருவானைச் காவிலும் பூரீரங்கத்திலும் உள்ள திருக்கோயில்களினுடைய. கோபுரங்களும், காவிரி ஆறும், கொள்ளிட நதியும், திருச்சி ராப்பள்ளி நகரமும் தெரியும். - இந்தத் தலத்தைப்பற்றிக் குறி ஞ் சிப் பன்னின் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: . ‘. . . நன்றுடை யானைத் தீயதி லானை நரைவெள்ளே றொன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக் குன்றுமை- யானைக்கூறளன் உள்ளம் குளிரும்மே. ' இந்தத் தலத்தைப்பற்றித் திருநாவுக்கரசு நாயனார். பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: