பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 275 மட்டு வார் குழ லாளொடு மால்விடை இட்ட மாவுகந் தேறும் இறைவனார் கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயும் சிட்டர் போலும் சிராப்பள்ளிச் செல்வரே. ' திருக்கற்குடி இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம் இங்கே கோயில் கோண்டிருப்பவருடைய திருநாமங்கள் மூத்திசுவரர், உச்சிநாதேசுவரர், உஜ்ஜீவன நாதர், உய்யக் கொண்டார், கற்பகநாதர் என்பவை. அம்பிகை அஞ்ச னாட்சி அம்மை. இதற்கு இக்காலத்தில் வழங்கும் பெயர் உய்யக் கொண்டான் என்பது. இதற்கு, இராஜகெம்பீரவன. நாட்டு மலை என்ற ஒரு பெயரும் உண்டு. திருச்சிராப் பள்ளிக்குத் தென் மேற்குத் திசையில் இரண்டரை மைல் தூரத்தில் இது உள்ளது. ஈழி நாட்டு அரசன் ஒருவன் உச்சிக் காலத்தில் வந்து உச்சிநாதேசுவரரை வழிபட்டு முத்தி பெற்ற தலம் இது. இந்தத் தலத்தைப் பற்றித் தக்கராகப் பண்ணில் திரு ஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: - : வடம்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத் தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர் இடம்திகழ் முப்புரி நூலர் - துன்ப்மொ டின்பம் தெல்லாம் கடந்தவர் காதலின் வாழும் கற்குடி மாமலை யாரே. " இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: - மூத்தவனை வானவர்க்கும் மூவா மேனி முதல்வனைத் திருவரையின் மூர்க்கப் பாம்பொன்