: 276 r பெரிய புராண விளக்கம்-7 றார்த்த வனை அக்கரவம் ஆரமாக அணிந்தவனைப் பணிந்தடியார் அடைந்த அன்போ டேத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க் கின்னமுதம் அளித்தவனை இடரை எல்லாம் காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே." இந்தத் தலத்தைப் பற்றி நட்டராகப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: செய்யார் மேனியனே திரு நீல மிடற்றினனே மையார் கண்ணி பங்காமத யானை உரித்தவனே கையார் சூலத்தினாய் திருக் கற்குடி மன்னி நின்ற ஐயா எம்பெருமான் அடி யேனையும் அஞ்சல் என்னே. ' திருப்பராய்த்துறை: இது சோழநாட்டில் காவிரி யாற்றின் தென்கரையில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் பராய்த்துறை நாதேசுவரர். அம்பிகை பொன்மயிலம்பிகை யம்மை. தலவிருட்சம் பராய்மரம். இது எழுமனுார் என்னும் ஊருக்கு வடமேற்குத் திசையில் ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது. இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் ஆகியவர்கள் வழிபட்ட தலம் இது. இந்தத் தலத்தைப் பற்றி மேகராகக் குறிஞ்சிப் பன் வணில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: - நீறு சேர்வதொர் மேனியர் நேரிழை கூறு சேர்வ தொர் கோலமாய்ப் பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை ஆறு சேர்சடை அண்ணலே.
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/282
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
