திருநாவுக்கரசு நாயனார் புராணம் 277 இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: 1 தொண்டு பாடியும் தூமலர் தூவியும் இண்டை கட்டி இணையடி ஏத்தியும் பண்ட ரங்கர் பராய்த் துறைப் பாங்கரைக் கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே. ’ பிறகு வரும் 303-ஆம் கவியின் கருத்து வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்தத் திருஎறும் பியூர், திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த் துறை ஆகிய சிவத்தலங்கள் முதலாக உள்ள அவற்றின் பக்கத்தில் உள்ள சிவத்தலங்களுக்கும் அந்த நாயனார் எழுந்தருளி அந்தச் சிவத்தலங்களில் திருக்கோயில்கொண்டு எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான்களைத் தம்முடைய கைகளைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டு விட்டுப் பிறகு தரையில் விழுந்து அந்தச் சிவபெருமான்களை வணங்கிவிட்டு அழகைப் பெற்று அமைந்துள்ள உழவாரத் திருப்பணியையும் வேறு பல திருப்பணிகளையும் புரிந்து விட்டு அந்தச் சிவபெருமான்களைப் பல திருப்பதிகங்களைக் கொண்டு வாழ்த்திவிட்டு தமக்குக் கிடைத்த சிவபெருமானு: டைய திருவருளினால் காவிரியாற்றைக் கடந்து அதனுடைய கரையில் ஏறி பகைவர்களாகிய தாரகாட்சன், வித்யுன் மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுடைய பறக்கும் கோட்டைகளாகிய மூன்று புரங்களை எரியுமாறு அழித்த மேருமலையாகிய வில்லை ஏந்தியவராகிய நீலகண்டேசு வரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருப் பைஞ்ஞீலிக்கு அந்த நாயனார் எழுந்தருளி அடைவா ராயினார். பாடல் வருமாறு: ' மற்றப் பதிகள் முதலான மருங்குள் ளனவும் கைதொழுது பொற்புற் றமைந்த திருப்பணிகள் செய்து பதிகங் கொடுபோற்றி
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/283
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
