பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பெரிய புராண விளக்கம்-7 உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம்எரியச் செற்ற சிலையார் திருப்பைஞ்ஞ் லியினைச் சென்று சேர்கின்றார். ” மற்று: அசைநிலை. அப்பதிகள்-அந்தத் திருநாவுக் கரசு நாயனார் அந்தத் திரு எறும்பியூர், திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவத்தலங்கள். முதலான-முதலாக உள்ள. மருங்கு-அவற்றின் பக்கத்தில். உள்ளனவும்-உள்ள சிவத்தலங்களுக்கும் அந்த நாயனார் எழுந்தருளி. கை தொழுது-அந்தச் சிவத்தலங்களில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் களைத் தம்முடைய கைகளைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டு விட்டுப் பிறகு தரையில் விழுந்து அந்தச் சிவபெருமான்களை வணங்கிவிட்டு. கை: ஒருமை பன்மை மயக்கம். பொற்பு-அழகை. உற்று-பெற்று. அமைந்த-தமக்கு ஏற்றவையாக அமைந்துள்ள திருப் பணிகள்-உழவாரத் திருப்பணியையும் வேறு பல திருப்பணி கனையும். செய்து-புரிந்துவிட்டு. பதிகம்-அந்தச் சிவபெரு மான்களைப் பல திருப்பதிகங்களை; ஒருமை பன்மை மயக் கம். கொடு-கொண்டு. போற்றி-வாழ்த்தி வணங்கிவிட்டு. உற்ற-தமக்குக் கிடைத்த, அருளால்-திருவதிகை வீரட் உானேசுவரர் வழங்கிய திருவருளினால், காவிரியை-காவிரி காற்றை ஏறி-கடந்து அதனுடைய கரையின் மேல் ஏறி, ஒன்னார்.பகைவர்களாகிய தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களினுடைய. புரம்-பறக் கும் கோட்டைகளாகிய மூன்று புரங்களை; ஒருமை பன்மை மயக்கம். எரிய-எரியுமாறு. ச்:சந்தி. செற்ற-அழித்த. சிலை யார்-மேருமலையாகிய வில்லைஏந்தியவராகிய நீலகண்டேசு வரர். திருப்பைஞ் Dலியினை-திருக்கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கும் திருப்பைஞ்ஞீலிக்கு உருபு மயக்கம். ச்சந்தி.