பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 279 சென்று. அந்த நாயனார் எழுந்தருளி, சேர்கின்றார்அடைவாராயினார். - திருபபைஞ்ஞ்வி: இதுசோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் சிலகண்டேசுவரர்: ஆரணிய விடங்கர் என்பவை. அம்பிகை .யின் திருநாமங்கள் விசாலாட்சியம்மை, நீள்நெடுங்கண்ணி என்பவை. திருச்சிராப்பள்ளியிலிருந்து வடக்குத் திசையில் நான்கு மைல் தூரம் சென்று கொள்ளிட நதியைக் கடந்து எட்டு மைல் கிழக்குத் திசையில் சென்றால் இந்தத் தலத்தை அடையலாம், - - - பசியினால் வருத்தத்தை அடைந்து வந்த திருநாவுக்கரசு நாயனாருக்கு நீலகண்டேசுவரர் கட்டமுது வழங்கியருளிய தலம் இது. அவ்வாறு கட்டமுது வழங்கியருளிய தடாகமும் தோட்டமும் இந்தத் தலத்துக்குத் தெற்குத் திசையில் முக் கால் மைல் தூரத்தில் உள்ளன. - இந்தத் தலத்தைப் பற்றிக் காந்தார பஞ்சமப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாக Aரம் வருமாறு: . - -

  • கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல் பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞலியார் பேடவர் ஆனவர் பெண்ணும் அல்லதோர் ஆடலை உகந்தஎம் அடிகள் அல்லரே." இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் வாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: " மத்த மாமலர் சூடிய மைந்தனார்

சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால் பத்தர் தாம்தொழு தேத் துபைஞ் ஞ்லிஎம் அத்தனைத்தொழ, வல்லவர் நல்லரே இந்தத் தலத்தைப் பற்றிக் கொல்லிப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: