திருநாவுக்கரசு நாயனார் புராணம் 28t விழியேந் தியநெற்றி யினார்தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய்." . . ." இந்தப் பாடல் குளகம். வழி-அவ்வாறு திருப்பைஞ்: சீலிக்கு எழுந்தருளுவதற்காக வழியில் போம்-எழுந்தருளும். பொழுது-சமயத்தில், மிக-மிகவும். இளைத்து-களைப்பை அடைந்து. வருத்தம் உற-வருத்தம் உண்டாக, நீர் வேட்கை கொடும்-தண்ணீரை விரும்பும் தாகத்தோடும். அழிவு-பல நன்மைகளை அழித்தலைக் கொண்டது. ஆம்-ஆகும். பசி வயிற்றுப் பசி. அவ்வாறு அழியும் நன்மைகளை, " மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம்முயற்சி தாளாண்மை-தேனின் கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும் பசிவந் திடப்போம் பறந்து.' * ベ注さ என்ற வெண்பாவினால் உணர்ந்து கொள்ளலாம். வந்து அணைந்திடவும்-தமக்குவந்து சேர்ந்தவுடன். அதற்கு-அந்தப் பசிக்கும் தாகத்துக்கும்; ஒருமை பன்மை மயக்கம். ச்சந்தி. சித்தம்-தம்முடைய திருவுள்ளம். அலையாது-வருந்தாமல். ஏ:அசைநிலை. மொழி-சொற்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். வேந்தரும்-அரசராகிய திருநாவுக்கரசு நாயனாரும். முன்-முன்னால்.எழுந்தருள-ன்.ழுந்தருளிவரமுருகு-நறுமணம் ஆர்-நிரம்பிய, சோலை-மலர்கள் மலர்ந்திருக்கும் பல வகை யான மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழில் சுற்றி யுள்ள ப்:சந்தி. பைஞ் சூரீவி திருப்பைஞ் சூரீலியில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். விழி-ஒற்றைக் கண்ணை. ஏந்திய-தாங்கிய நெற்றியினார்-நெற்றியைப் பெற்றவராகிய நீலகண்டேசுவரர். தம்-தம்முடைய. தொண்டர்-திருத்தொண்டராகிய திருநாவுக்கரசு நாடி. னார். வருத்தம்-பசியினாலும் தாகத்தினாலும் அடைந்தி, வருத்தத்திலிருந்து. மீட்பாராய். அந்த நாயனாரை மீட்டு: அருளுவாராகி, - * . * * - • ,
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/287
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
