பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284. - பெரிய புராண விளக்கம்-7 வெங்கண் விடைவே தியர்நோக்கி, 'மிகவும் வழிவந் திளைத்திருந்தீர்; இங்கென் பாலே பொதிசோறுண் டிதனை உண்டு தண்ணீர்.இப் பொங்கு குளத்தில் குடித்திளைப்புப் போக்கிப் போவீர்” எனப் புகன்றார். ' அங்கண் - அந்த வழியில். இருந்த வீற்றிருந்தருளிய, மறையவர்.பால்-ஒரு வேதியராக வடிவை எடுத்துக்கொண்டு எழுந்தருளிய நீலகண்டேசுவரரிடத்தில். ஆண்ட-திருவ: திகை வீரட்டானேசுவரர் தடுத்து ஆட்கொண்டருளியம் அரசும்-திருநாவுக்கரசு நாயனாரும் திணை மயக்கம். எழுந்: தருள-அந்த வழியில் எழுந்தருளி வர. வெம்-வெப்பமாக இருக்கும். கண்-கண்களைப் பெற்ற ஒருமை பன்மை: மயக்கம். விடை-இடப வாகனத்தை ஒட்டுபவராகிய; ஆகு பெயர். வேதியர்-அந்த அந்தனர். நோக்கி-திருநாவுக்கரசு நாயனாரைப் பார்த்தருளி. மிகவும் வழிவந்து-நீர் இந்த வழியாக நடந்து வந்து மிகவும். இளைத்திருந்தீர்களைப்பை அடைந்திருந்தீர். இங்கு-இந்த இடத்தில். என் பால்-என்னிடம். ஏ:அசைநிலை. பொதிசோறு - கட்டுச் சோற்று மூட்டை; ஆகு பெயர். உண்டு - இருக்கிறது. இதனை - இந்த முட்டையில் உள்ள கட்டுச் சோற்றை, உண்டு-நீர் உண்டுவிட்டு. தண்ணீர்-குளிர்ச்சியைப் பெற்ற நீரை. இப்பொங்கு-இந்த நீர் பொங்கி எழும். குளத்தில். குளத்திலிருந்து அள்ளிக்கொண்டு. குடித்து-அந்த நீரைச் குடித்துவிட்டு. இளைப்பு-நீர் அடைந்திருந்த களைப்பை, உப்:சந்தி. போக்கி-போக்கிவிட்டு. ப்:சந்தி. போவீர்-மேனேச் செல்லுவீராக, எண்-என்று: இடைக்குறை. ப்:சந்தி. புகன் றார்.அந்த நீலகண்டேசுவரர் திருவாய் மலர்ந்தருளிச் செப். தார். - - பிறகு வரும் 307-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: