திருநாவுக்கரசு நாயனார் புராணம் 285 அவ்வாறு எழுந்தருளும் திருநாவுக்கரசு நாயனார். இது நம்பராகிய நீலகண்டேசுவரர் வழங்கிய திருவருளால் கிடைத்தது எனத் தெரிந்து கொண்டவரைப் போல, இந் தக் கட்டுச் சோற்றை நீர் உண்பீராக’’ என்று அந்த அழகிய வேதியராகிய நீலகண்டேசுவரர் திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு அந்தக் கட்டுச்சோற்றை வழங்கியருளிய வுடன் அதைப்பற்றி நினைக்கும் எண்ணத்தை அடையாமல் அந்தச் கட்டுச் சோற்றை அந்த நீலகண்டேசுவரருக்கு எதிரி அந்தத் திருநாவுக்கரசு நாயனார் வாங்கிக்கொண்டு இனிமையோடு திருவமுது செய்துவிட்டு இனிமையான சுவையைப் பெற்றதும் குளிர்ச்சியை உடையதுமாகிய அந்தக் குளத்துநீரைக் குடித்தருளித் தம்முடைய தாகத் தைப் போக்கிக்கொண்டு அந்த நீரால் தம்முடைய திரு. வாயை அலம்பிப் பரிசுத்தம் செய்துகொண்டு தம்முடைய தளர்ச்சியிலிருந்து நீங்கினார். பாடல் வருமாறு: . ' கண்ணும் திருகா வுக்கரசர் -- கம்பர் அருள் என் றறிந்தார்போல், உண்ணும்' என்று திருமறையோர் உரைத்துப் பொதிசோறளித்தலுமே எண்ண கினையா தெதிர்வாங்கி இனிதா அமுது செய்தினிய தண்ணீர் அமுது செய்தருளித் தூய்மை செய்து தளர்வொழிந்தார். . . நண்ணும்-அவ்வாறு அந்த வழியாக எழுந்தருளும். திருநாவுக்கரசர்-திருநாவுக்கரசு நாயனார். நம்பர்-இது தம் .. முடைய அடியவர்களுக்குப் பலவிதமான நம்பிக்கைகளை உண்டாக்குபவராகிய நீலகண்டேசுவரர். அந்த நம்பிக்கை கள் இன்ன என்பதை வேறுஓரிடத்தில் கூறினோம் ஆண்டுக் கண்டு உணர்க. அருள்-வழங்கிய திருவருளால் கிடைத்தது: ஆகு பெயர். என்று-னன. அறிந்தார் போல்-தெரிந்து
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/291
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
