பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 * , , பெரிய புராண விளக்கம்ட? கொண்டவரைப் போல. உண்ணும்-இந்தக் கட்டுச்: சோற்றை நீர் உண்பீராக. என்று-எண. திரு-அழகிய. மறையோர்-வேதியராக எழுந்தருளிய நீலகண்டேசுவரர், உரைத்து-திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. ப்:சந்தி. பொதி சோறு-தாம் கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்றை. அளித்தலும்-வழங்கியருளியவுடன். ஏ: அசை நிலை. எண்ணம்-அதைப்பற்றி நினைக்கும் எண்ணத்தை. நினை யாது-எண்ணிப் பார்க்காமல். எதிர்-அந்த நீலகண்டேசுவர குக்கு எதிரில். வாங்கி-தாம் வாங்கிக் கொண்டு. இனிதா. இனிமையோடு. அமுது செய்து-திருவமுது செய்து விட்டு: உண்டு விட்டு. இனிய-இனிமையாகியசுவையைப் பெற்றதும்: வினையாலனையும் பெயர். தண்-குளிர்ச்சியை உடையதும்; ஆகு பெயர். நீர்-ஆகிய அந்தக் குளத்து நீரை, அமுது செய்தருளி-குடித்தருளி. த்:சந்தி. தூய்மை-தம்முடைய தாகத்தைப் போக்கிக் கொண்டு அந்தக் குளத்து நீரால் தம்முடைய திருவாயை அலம்பிப் பரிசுத்தம், செய்துபுரிந்து கொண்டு. தளர்வு-தாம் பசியினாலும் தாகத்தாலும்: அடைந்திருந்த தளர்ச்சியிலிருத்து. ஒழிந்தார்-நீங்கினார். அடுத்து வரும் 308-ஆம் கவியின் கருத்து வருமாறு: 'அவ்வாறு தமக்கு உண்டாகியிருந்த களைப்பிலிருந்து விடுபட்டு நின்று கொண்டிருந்த அந்தத் திருநாவுக்கரசு நாயனாரைப் பார்த்தருளி அந்த இடத்தில் வீற்றிருந்த, வேதியராகிய நீலகண்டேசுவரர் இதற்கு அப்பால் நீர் எந்த ஊருக்குச் செல்வதாக இருக்கிறீர்!" என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்; அந்தத் திருநாவுக்கரசு நாயனா ரும் அந்த நீலகண்டேசுவரருக்கு எதிரில் திருவாய் மலர்ந்: தருளிச் செய்பவராகி, ‘அடியேன் திருப்பைஞ்ஞீலிக்குச் செல்வதாக இருக்கிறேன்!' என்று திருவ்ாய் மலர்ந்தருளிச் செய்ய தமக்கு நிகராக வேறு யாரும் இல்லாதவராகிய அந்த நீலகண்டேசுவரரும், "நானும் அந்தத் திருப்பைஞ் சிலிக்குச் செல்கிறேன்” என்று திருவாய் மலர்ந்தருளிச்