பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 287 " செய்து விட்டு அந்தத் திருநாவுக்கரசு நாயனாரோடு எழுந் , தருளினார். பாடல் வருமாறு: எய்ப்பு நீங்கி கின்றவரை நோக்கி இருந்த மறையவனார் "அப்பால் எங்கு நீர்போவ தென்றார்: அரசும் அவர்க் கெதிரே செப்பு வார், 'யான் திருப்பைஞ்சீ லிக்குப் போவ' தென்றுரைப்ப ஒப்பிலாரும், யான் அங்குப் போகின்றேன்' என்றுடன் போந்தார். எய்ப்பு-அவ்வாறு பசியினாலும் தாகத்தாலும் தமக்கு உண்டாகியிருந்த களைப்பிலிருந்து. நீங்கி-விடுபட்டு. நின்ற. வரை.நின்று கொண்டிருந்த அந்தத் திருநாவுக்கரக நாயனாரை. நோக்கி-பார்த்தருளி. இருந்த-அந்த வழியில் விற்றிருந்த மறையவனார்-வேதியராகிய நீலகண்டேசுவரர். - அப்பால்-இந்த இடத்துக்கு அப்பால். எங்குநீர்-நீர் எந்த ஊருக்கு. போவது-செல்வதாக இருக்கிறீர். என்றார்-என்று. அத்த ஈசுவரர் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். அரசும். அந்தத் திருநாவுக்கரசு நாயனாரும்; திணை மயக்கம். அவர்க்கு-அந்த நீலகண்டேசுவரர்க்கு. எதிர்-எதிரில். ஏ: அ ைச நிலை. செப்புவர்-திருவாய் மலர்ந்தருளிச் செய்ய வராகி; முற்றெச்சம். யான்-அடியேன்.திருப்டைஞ்சீலிக்குப்போவது-திருப்பைஞ்சிலிக்குச் செல்வதாக இருக்கிறேன். என்று-என. உரைப்ப-அந்த நாயனார் திருவாய் மலர்ந் தருளிச் செய்ய. ஒப்பு-தமக்கு நிகராக. இலாரும்-வேறு யாரும்இல்லாதவராகிய அந்த நீலகண்டேசுவரரும்; இடைக் குறை. யான்-நானும். அங்கு-அந்தத் திருப்பைஞ்சீலிக்கு. ப்:சந்தி. போகின்றேன்-செல்கிறேன். என்று-எனத் திருவாய் மலர்த்தருளிச் செய்து விட்டு. உடன்-அந்தத் திருநாவுக்கரசு நாயனாரோடு. போந்தார்-எழுந்தருளினார். . . . 熱 戀