பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.288 - பெரிய புராண விளக்கம்-1 பிறகு உள்ள 309-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'அவ்வாறு திருநாவுக்கரசு நாயனாரோடு சேர்ந்து கொண்டு எழுந்தருளி அந்த வேதியராகிய நீலகண்டேசுவரர் திருப்பைஞ்சீவியைச்சமீபிக்க அந்த ஈசுவரர்தாம்பூண்டிருந்த வேதியருடைய வேடத்தை அந்தத் திருநாவுக்கரசு நாயனா ருக்கு முன்னால் மறைத்துக் கொண்டவுடன் உண்மையாகிய தவத்தைப் புரிந்த மேம்பாட்டைப் பெற்றவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார், 'திருநடனம் புரிந்தருளிய நீலகண்டேசுவரர் அடியேனையும் ஒரு பொருளாக எண்ணி .யருளி இந்தக் கட்டுச் சோற்றையும் நீரையும் அடியேனு டைய பசியைப் போக்கிக் கொள்ளவும் அடியேனுக்கு உண்டாகியிருந்த தாகத்தைத் தீர்த்துக் கொள்ளவும் வழங்கியருளிய பெருங்கருணையே இது. என்று அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எண்ணி ஒரு பாசுரத்தை விரும்பிப் பாடியருளித் தரையில் விழுந்து அந்த நீலகண்டேசுவரரை வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு தம்முடைய விழிகளிலிருந்து வழியும் நீரை மழையைப் போலச் சொரிந்தார். பாடல் வருமாறு: கூட வந்து மறையவனார் திருப்பைஞ் சீலி குறுகியிட வேடம் அவர்முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர்தாம் ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளா அளித்த கருணை எனப் பாடல் புரிந்து விழுந்தெழுந்து - கண்ணிர் மாரி பயில்வித்தார். ' . கூட-அவ்வாறு திருநாவுக்கரசு நாயனாரோடு சேர்ந்து கொண்டு. வந்து-எழுந்தருளி. மறையவனார்-அந்த வேதிய ராகிய நீலகண்டேசுவரர், திருப்பைஞ்சீலி-திருப்பைஞ் சீலிக்கு. குறுகியிட-சமீபத்தில் எழுந்தருள வேடம்-தாம்