திருநாவுக்கரசு நாயனார் புராணம் : 289 பூண்டிருந்த வேதியருடைய வேடத்தை. அவர்-அந்தத் திருநாவுக்கரசு நாயனாருக்கு.முன்-முன்னால்,மறைத்தலும் -மறைத்துக் கொண்டவுடன். ஏஅசை நிலை. மெய்ம்மைஉண்மையாகிய, த்:சந்தி. தவத்து. தவத்தைப் புரிந்த, மேலவர் தாம்-மேம்பாட்டைப் பெற்றவராகிய அந்தத் திரு நாவுக்கரசு நாயனார். தாம்; அசை நிலை. ஆடல்-திரு நடனம், புரிந்தார்-புரிந்தருளிய நீலகண்டேசுவரர். அடியே னைப் பொருளா:அடியேனையும் ஒரு பொருளாக மதித் தருளி. அளித்த-இந்தக் கட்டுச் சோற்றையும் குளத்து நீரையும் அடியேனுடைய பசியைப் போக்கிக் கொள்ளவும் அடியேனுக்கு உண்டாகியிருந்த தாகத்தைத் தீர்த்துக் கொள்ளவும் வழங்கியருளியது.கருணை-பெருங்கருணையே. என-என்று அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எண்ணி; இடைக் குறை. பாடல்-ஒரு பாசுரத்தை. புரிந்து-விரும்பிப் பாடியருளி. விழுந்து-தரையில் விழுந்து அந்த நீலகண்டேசு வரரை வணங்கி விட்டு. எழுந்து- பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. கண்-தம்முடைய விழிகளிலிருந்து; ஒருமை பன்மை மயக்கம், நீர்-வழியும் நீரை. மாரி-மழை யைப்போல. பயில்வித்தார்-வழியுமாறு செய்தார், அவ்வாறு திருதாவுக்கரசு நாயனார் பாடியருளிய பாசுரம் இப்போது கிடைக்கவில்லை. மறைந்து போன தேவாரத் திருமுறை களில் உள்ள பாசுரங்களில் அதுவும் ஒன்றாக இருக்கும போலும் அந்த நாயனார் திருப்பைஞ்ஞ்லியைப் பற்றிப் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: . . காரு லாமர்க் கொன்றையத் தாரினான் வாரு லாமுலை மங்கையோர் பங்கினர் தேரு லாம்பொழில் சூழ்ந்த பைஞ்ஞ்லிஎம் ஆர்கி லாஅமு தையடைந் துய்ம்மினே. ’’ பிறகு வரும் 310-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: தி-19
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/295
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
