292 பெரிய புராண விளக்கம்-7 தில் சேர்ந்திருந்த பண்கள் அமைந்த சொற்சுவை பொருட் சுவை ஆகிய வளப்பங்களைப் பெற்ற செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதிகத்தை அந்த நாயனார் பாடியருளி உமாதேவியாராகிய மாதரசியாரைத் தம்முடைய வாம பாகத்தில் எழுந்தருளச் செய்திருப்பவராகிய திருவதிகை வீரட்டானேசுவரர் வழங்கிய திருவருளால் வடக்குத் திசையை நோக்கி அந்த வாகீசராகிய திருநாவுக்கரசு நாய னார் எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவராகிய அருணா சலேசுவரர் வீற்றிருந்தருளிய திருவண்ணாமலைக்கு எழுந் தருளினார். பாடல் வருமாறு: 'நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பலமிகவும் காதல் கூரச் சென்றிறைஞ்சிக் கலந்த இசைவண் டமிழ்பாடி மாதொர் பாகர் அருளாலே வடபால் நோக்கி வாகீசர் ஆதி தேவர் அமர்ந்ததிரு வண்ணா மலையை கண்ணினார்.' நாதர்-தம்முடைய தலைவராகிய திருவதிகை வீரட்டா னேசுவரர். மருவும்-மருவி எழுந்தருளியிருக்கும். திருஅழகிய, மலைகள்-மலைகளையும். நாடும்-தாம் வணங்க விரும்பும், பதிகள்-சிவத்தலங்களாகிய பல-பலவற்றிற்கும். மிகவும் காதல்-மிகவும் விருப்பம். கூர-மிகுதியாக உண்டாக, ச்:சந்தி. சென்று-அந்தச் சிவத்தலங்களுக்கு அந்தத் திரு நாவுக்கரசு நாயனார் எழுந்தருளி. இறைஞ்சி-அந்தச் சிவத் தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவ பெருமான்களை வணங்கிவிட்டு. க், சந்தி. கலந்த-தம்மு டைய திருவுள்ளத்தில் சேர்ந்திருந்த, இசை-உரிய பண்கள் அமைந்த, ஒருமை பன்மை மயக்கம். வண்-சொற்சுவை பொருட்சுவையாகிய வளப்பங்களைப் பெற்ற. தமிழ்.செந் தமிழ் மொழியில் அமைந்த், பாடி-ஒரு திருப்பதிகத்தை அந்த
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/298
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
