பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 293 நாயனார் பாடியருளி. மாது-உமாதேவியாராகிய மாதரசி யாரை: ஒருமை பன்மை மயக்கம். ஒர் பாகர்,தம்முடைய ஒரு பாகமாகிய வாம பாகத் ல் எழுந்தருளச் செய்திருப்பவ ராகிய திருவதிகை வீரட்டானேசுவரர். அருளால்-வழங்கிய திருவருளால், ஏ:அசைநிலை. வ.பால்நோக்கி-வடக்குத் திசையை நோக்கி. வாகீசர்-வாகீசராகிய அந்தத் திருநாவுக் கரசு நாயனார். ஆதிதேவர்-எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவராகிய அருணாசலேசுவரர். அமர்ந்த-வீற்றிருந் தருளிய, திருவண்ணாமலையை.திருவண்ணாமலைக்கு: உருபு மயக்கம். நண்ணினார்.அந்த நாயனார் எழுந் தருளினார். . - திருவண்ணாமலை::இது நடு நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் அரு ணாசலேசுவரர், அண்ணாமலைநாதர், சோணாசலேசுவரர் என்பவை. அம்பிகையின் திருநாமங்கள் உண்ணாமுலை அம்மை, அபீதகுசாம்பிகை என்பவை. தீர்த்தங்கள் பிரம தீர்த்தம் முதலியவை. தலவிருட்சம் மகிழ மரம். х இது விழுப்புரத்துக்கு மேற்குத் திசையில் 12 மைல் தூரத்தில் உள்ளது. இது பஞ்ச பூதத் தலங்களுக்குள் தேயுத் தலம், நினைக்க முத்தியளிக்கும் சிவத்தலம். ஸ்மரணா தருணாசலம் என வடமொழியில் வருவதைக் காண்க. அருணாசலேசுவரர் வல்லாள மகாராசனுக்குப் புதல்வராய்த் திருவவதாரம் செய்தருளித் திருவருள் வழங்கிய தலம் இது. "யானே பரம்', 'யானே பரம்' என்றுசெருக்கால் கூறிய பிரம தேவனுக்கும் திருமாலுக்கும் முன்னால் அருணாசலேசுவரர் ஓர் அக்கினி மலையாக எழுந்தருளி, அந்த இரண்டு தேவர் களும் அன்னப் பறவையாக வடிவத்தை எடுத்துக் கொண்டு மேலே பறந்து திருமுடியைத் தேடிப் பார்த்தும், பன்றி வடிவத்தை எடுத்துக்கொண்டு நிலத்தைத் தோண்டித் திருவடிகளைத் தேடிப் பார்த்தும் அந்த இரண்டு தேவர் களும் திருமுடியையும் திருவடிகளையும் காண முடியாமல்