பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 . பெரிய புராண விளக்கம்-T பட்டி ஏறுகந் தேறிம் பலஇலம் இட்ட மாக இரந்துண் டுழிதரும் அட்ட மூர்த்தி அண் ணாமலை கைதொழக் கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே. " பிறகு வரும் 312-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: சிவப்பாக இருக்கும் கண்களைப் பெற்ற இடப வாக னத்தை ஒட்டுபவராகிய அருணாசலேசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவண்ணாமலைக்கு அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி அந்த அருணாசலேசுவரரை வணங்கி விட்டுப் பிறகு அவருடைய திருக்கோயிலை வலமாக வந்து பரிசுத்தமாக உள்ள அந்தத் தலத்தில் உள்ள மலையின்மேல் ஏறித் தம்முடைய திருத். தொண்டர்கள் புரியும் வணக்கத்திற்கு மகிழ்ந்து அவர் களுக்கு எதிரில் எழுந்தருளி வந்து நிற்கும் அழகிய கண் களைப் பெற்ற அரசராகிய அந்த அருணாசலேசுவரரை மீண்டும் தரையில் விழுந்து அந்த நாயனார். வணங்கிவிட்டுப் விறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு ஆனந்த சாகர்த்தில் முழுகி இன்புற்று அந்தத் திருநாவுக்கரசு நாய னார் தாம் திருவவதாரம் செய்த இந்த மனிதப்பிறவியே முக்தியைக் காட்டிலும் மேலாக விளங்கும் பெருமையைக் சாதித்துக் காட்டினார். பாடல் வருமாறு:

செங்கண் விடையார் திருவண்ணா

மலையைத் தொழுது வலங்கொண்டு துங்க வரையின் மிசைஏறித் தொண்டர் தொழும்புக் கெதிர்கிற்கும் அங்கண் அரசைத் தொழுதெழுந்து திளைத்துத் திருகா வுக்கரசர் தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார்." செம்-சிவப்பாக இருக்கும். கண்-கண்களைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். விடையார்-இடப வாகனத்தை