பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 297, ஒட்டுபவராகிய அருணாசலேசுவரர். திருவண்ணாமலையை-- திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவண்ணா மலைக்கு அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி: உருபு மயக்கம். த்:சந்தி. தொழுது-அருணாசலேசுவரரை வணங்கிவிட்டு. வலங்கொண்டு. பிறகு அவருடைய திருக் கோயிலை வலமாக வந்து. துங்க-பரிசுத்தமாக உள்ள. வரையின்மிசை ஏறி-அந்தத் தலத்தில் உயரமாக நிற்கும். மலையின்மேல் ஏறி. த்:சந்தி, தொண்டர்-தம்முடைய திருத்தொண்டர்கள்; ஒருமை பன்மை மயக்கம். தொழும் புக்கு-புரியும் வழிபாட்டினால் மகிழ்ச்சியை அடைந்து: உருபு மயக்கம். எதிர்நிற்கும்-அவர்களுக்கு எதிரில் எழுந் தருளி வந்து நிற்கும். அம்-அழகிய கண்-கண்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். அரசை-அரசராகிய, அந்த அருணாசலேசுவரரை. த்:சந்தி. தொழுது-மீண்டும் தரையில் விழுந்து அந்த நாயனார் வணங்கிவிட்டு. எழுந்துபிறகு தரையிலிருந்து எழுந்து நின்றுகொண்டு. திளைத்துஆனந்த சாகர்த்தில் முழுகி இன்புற்று. த்:சந்தி. திருநாவுக் கரசர்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார். தங்கு-தாம் எடுத்துக்கொண்டு இந்தப் பூமியில் தங்கியிருக்கும். பிறப்பே. மனிதப் பிறவியே. வீட்டினுக்கு-முக்தியைக் காட்டிலும்;: உருபு மயக்கம். மேல் ஆம்-மேலாக விளங்கும். பெருமைபெருமையை. சாதித்தார்-சாதித்துக் காட்டினார். - இந்த மனிதப் பிறவியே முக்தியைக் காட்டிலும்: மேலானது: - --- * தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாவிதாம் இன்பமாம் என்று கண்ணில் ஆ னந்த அருவிநீர் சொரியக் கைம்மலர் உச்சிமேற் குவித்துப்