திருநாவுக்கரசு நாயனார் புராணம் 299 கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் கடலில் வந்தெழுந்த உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட் டுருகும் சிந்தையுடன் பண்ணார் பதிகத் தமிழ்பாடிப் பணிந்து பரவிப் பணிசெய்தார். ' அண்ணாமலை மேல்-திருவண்ணாமலையில் விளங்கும். உயரமாக உள்ள மலையின் மேல். அணி-எழுந்தருளி -யிருக்கும் அழகைப் பெற்ற மலையை-மலையைப் போன்ற வராகிய அருணாசலேசுவரரை; உவம ஆகுபெயர். ஆராதிருப்தியை அடையாத, அன்பின்-பக்தியோடு. அடியவர் தம்-தம்முடைய அடியவர்களுக்கு; ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. கண்-கண்களால்; ஒருமை பன்மை மயக்கம். ஆர்-நிறையத் துய்க்கும். அமுதை-அமுதத்தைப் போன்ற வரை: உவம ஆகுபெயர். விண்ணோரை-தேவலோகத் தில் வாழும் தேவர்களை: ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. காக்க-உயிர்களை விடாமல் காப்பாற்றும் பொருட்டு. க்:சந்தி. கடலில் வந்து எழுந்த-திருமால் பள்ளி கொண்டருளிய பாற்கடலில் வந்து எழுந்ததும்; வினையாலணையும் பெயர். உண்ணா-வேறுயாரும் விழுங்க முடியாத, நஞ்சம்-ஆலகால விடத்தை. உண்டானைவிழுங்கியவனாகிய அந்த அருணாசலேசுவரனை. க்:சந்தி, கும்பிட்டு-அந்த நாயனார் தம்முடைய திருக்கரங்களைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டு விட்டுப் பிறகு தரையில் விழுந்து அந்த அருணாசலேசுவரரை வணங்கிவிட்டு, உருகும்.பக்தியினால் உருக்கத்தை அடை. யும். சிந்தையுடன்-திருவுள்ளத்தோடு, பண்-உரிய பண். ஆர்-அமைந்த பதிக-ஒரு திரு பதிகமாகிய, த்:சந்தி. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்ததை பாடி-பாடி அயருளி, ப்:சந்தி. பணிந்து-மீண்டும் அந்த அருணாசலேசு
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/305
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
