திருநாவுக்கரசு நாயனார் புராணம் 303. 'விருப்பத்தோடு பக்தியைப் புரியும் எண்ணத்தினோடு: காட்டையும், மலையையும், காட்டாற்றையும், மாமரங்: கள் மிகுதியாக வளர்ந்து நிற்கும் குளிர்ச்சியைப் பெற்ற நீர் பாயும் வயல்களைப் பெற்ற சிவத்தலங்கள் பலவற்றையும். தாண்டி எழுந்தருளி சொற்களுக்குத் தலைவராகிய அந்தத் திரு நாவுக்கரசு நாயனார் எழுந்தருளிப் பெருமையைப் பெற்ற தொண்டை மண்டலமாகிய நல்ல நாட்டை அடைந்து முன்பாகவே குளிர்ச்சியைப் பெற்ற மலர்கள் மலர்ந்திருக்கும் பலவகை மரங்கள் வளர்ந்து நிற்கும். மென்மையைப் பெற்ற பூம்பொழில் சுற்றியிருக்கும் திரு. வோத்துாருக்கு அந்த நாயனார் எழுந்தருளிச் சேர்ந்தார்.' பாடல் வருமாறு: - - - ' காதல் செய்யும் கருத்தினுடன் காடும் மலையும் கான்யாறும் சூதம் மலிதண் பணைப்பதிகள் பலவும் கடந்து சொல்லினுக்கு காதர் போந்து பெருக்தொண்டை கன்னா டெய்தி முன்னாகச் சீத மலர்மென் சோலைசூழ் திருவோத் தூரிற் சென்றடைந்தார். ' காதல்-விருப்பத்தோடு பக்தியை, செய்யும்:புரியும். கருத்தினுடன்-எண்ணத்தோடு. காடும்.இடையில் உள்ள கட்டையும். மலையும்-மலையையும். கான்யாறும்-காட் டாற்றையும். சூதம்-மாமரங்கள்; ஒருமை பன்ம்ை மயக்கம். மலி-மிகுதியாக வளர்ந்து நிற்கும். தண்-குளிர்ச்சியைப் பெற்ற நீர்பாயும்; ஆகுபெயர். பணை-வயல்களைக் கொண்ட, ப்,சந்தி. பதிகள்-சிவத்தலங்கள். பலவும். பலவற்றையும். கடந்து-தாண்டி, சொல்லினுக்கு-தாம். பாடியருளும் திருப்பதிகங்களில் உள்ள சொற்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். நாதர்-தலைவராகிய அந்தத்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/309
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
