304 பெரிய புராண விளக்கம்-7 திருநாவுக்கரசு நாயனார். போந்து-எழுந்தருளி. பெரும்பெருமையைப் பெற்று விளங்கும். தொண்டை-தொண்டை மண்டலமாகிய, நல்.நல்ல, நாடு-நாட்டை. எய்திஅந்த நாயனார் அடைந்து. முன்னாக-முன்பாகவே. ச்:சந்தி. சீத-குளிர்ச்சியைப் பெற்ற, மலர்-மலர்கள் மலர்ந் திருக்கும். பலவகையான மரங்கள் வளர்ந்து நிற்கும்: ஒருமை பன்மை மயக்கம். அந்த மரங்களாவன: தேக்கமரம். வாகை மரம், வேங்கைமரம், மகிழமரம், கடப்பமரம், பவள மல்லிகைமரம், பூவரசமரம், விளாமரம், வில்லமரம்" நெட்டிலிங்க மரம், அசோக மரம், அரசமரம், ஆலமரம் முதலியவை. மென்-மென்மையைப் பெற்ற. சோலைபூம்பொழில். சூழ்-சுற்றியிருக்கும். திருவோத்துாரில்திருவோத்துாருக்கு; உருபு மயக்கம். சென்று-அந்த நாய னார் எழுந்தருளி. அடைந்தார்-சேர்ந்தார். திருவோத்துர்: இது தொண்டை நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் வேதநாதசு வரர். அம்பிகை இளமுலை நாயகி. இது காஞ்சிபுரத்திற்குத் தென் மேற்குத் திசையில் 10-மைல் தூரத்தில் உள்ளது. மூன்றாவது மைலில் பாலாற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும். திருக்கோயிலுக்கு மேற்குப் பக்கத்தில் சேயாறு ஒடுகிறது. இது ஆண் பனை மரங்கள் பெண்பனை மரங்க ளாக மாறிய தலம். இந்தச் செய்தியைப் பழந்தக்கராகப் பண்ணில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய பின் வரும் பாசுரத்தால் அறியலாம். ' குரும்பை ஆண்பனை ஈன்குலை ஒத்துார் அரும்பு கொன்றை அடிகளைப் பெரும்பு கலியுள் ஞானசம்பந் தன் சொல் விரும்பு வார்வினை வீடே, ' கருங்கல்லினால் ஒரு பனமரம் செய்து இந்தத் திருக் கோயிலில் வைத்திருக்கிறார்கள். அந்த மரத்தில் பாதி
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/310
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
