பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 30? முதலாக உள்ள தக்கவையாகிய இனிய சுவையைப் பெற்ற சொற்கள் அமைந்த மாலைகளாகிய பல திருப்பதிகங்களை அந்த வேத நாதேசுவரருக்கு அணிந்துவிட்டு அந்தத் திருவோத்துாரில் சேர்ந்து தங்கியிருந்து கொண்டு தமக்குரிய உழவாரத் திருப்பணியையும் வேறு பல திருப்பணிகளையும் புரிந்துகொண்டு வாழ்வாரானார். பாடல் வருமாறு :

  • செக்கர்ச் சடையார் திருவோத்துர்த்

தேவர் பிரானார் தம்கோயில் புக்கு வலங்கொண் டெதிர்இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல்பொழிய முக்கட் பிரானை விரும்புமொழித் திருத்தாண் டகங்கள் முதலாகத் தக்க மொழிா லைகள்சாத்திச் - சார்ந்து பணிசெய் தொழுகுவார்.” செச்கர்.செவ்வந்தி மாலையைப் போலச் சிவந் திருக்கும்; உவம ஆகுபெயர். ச் சந்தி. சடையார்-சடா பாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய வேத நாதேசுவரர். திருவோத்துார்-திருக்கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவோத்துாரில் உள்ள ஆலயத்தில் விளங்கும்; இடஆகுபெயர். த்:சந்தி. தேவர். எல்லாத் தேவர்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். பிரானார் தம்தலைவராகிய அந்த வேத நாதேசுவரருடைய, தம்: அசை - நிலை. கோயில்-திருக்கோயிலுக்குள். புக்கு-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் நுழைந்து. வலங்கொண்டு-அந்த ஆலயத்தை வலமாக வந்து. எதிர்-அந்த வேத நாதேசுவர. ருடைய சந்நிதியில் நின்றுகொண்டு. இறைஞ்சி-அந்த வேத. நாதேசுவரரை அந்த நாயனார் வணங்கிவிட்டு. ப்:சந்தி: போற்றி-வாழ்த்தி. க்:சந்தி. கண்கள். தம்முடைய இரண்டு. திருவிழிகளும். புனல்-பக்தியினால் நீரை. பொழிய-சொரிய, முக்கண்-மூன்று கண்களைப் பெற்ற. கண்:ஒருமை பன்மை மயக்கம். பிரானை தம்முடைய தலைவனாகிய அந்த