பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 309 தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களைப் பணிந்துவிட்டு தையலாகிய காமாட்சி அம்மை தம்மைக் கட்டித் தழுவியதனால் குழைவை அடைந்த தலைவனாகிய ஏகாம்பரேசுவரன் தங்கி எழுந்தருளியிருக்கும் தெய்வத் தன்மை வாய்ந்த சிவத்தலம் என இந்த உலகத்தில் வாழும் மக்கள் யாவரும் தரையில் விழுந்து வணங்கிப் பிறகு தரையி லிருந்து எழுந்து நின்று கொண்டு துதிக்கும் திருமதில் சுற்றி யுள்ள காஞ்சீபுரத்தின் பக்கத்தை அந்த நாயனார் அடைந் தார். பாடல் வருமாறு: - ' செய்ய ஐயர் திருவோத்துர் ஏத்திப் போந்து செழும்புவனம் உய்ய கஞ்சுண் டருளும்வர் உறையும் பதிகள் பலவணங்கித் தையல் தழுவக் குழைந்தபிரான் தங்கும் தெய்வப் பதிஎன்று வையம் முழுதும் தொழுதேத்தும் - மதில்சூழ் காஞ்சி மருங்கண்ைந்தார்." செய்ய-சிவப்பாக விளங்கும் திருமேனியைப் பெற்ற; வினையாலணையும் பெயர். ஐயர்-ஐயராகிய வேதநாதேசு வரர் திருக்கொயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். ஐயர்தலைவர், தந்தையாரைப் போன்றவர், அழகைப் பெற்றவர். திருவோத்துார்-திருவோத்துருக்கு அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி. ஏத்தி-அந்த வேதநாதேசுவரரைத் துதித்துவிட்டு. ப்:சந்தி. போந்து-மேலே எழுந்தருளி. செழும்.செழுமையைப் பெற்ற புவனம்-பல உலகங்களில், வாழ்பவர்கள்; இடஆகுபெயர். உய்ய-தங்களுடைய உயிர்கள் போகாமல் பிழைத்திருக்கும் வண்ணம், நஞ்சுதிருமால் பள்ளிகொண்டருளியுள்ள பாற்கடலில் எழுந்த ஆலகால விடத்தை. உண்டருளும்-விழுங்கியருளும். அவர்அந்த வேதநாதேசுவரர். உறையும்-தங்கித் திருக்கோயில்,