பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 பெரிய புரான விளக்கம்-7 கொண்டு எழுந்தருளியிருக்கும். பதிகள்-சிவத்தலங்கள். ப்ல-பலவற்றிற்கும் அந்த நாயனார் எழுந்தருளி, வணங்கிஅந்தச் சிவத்தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் களைப் பணிந்துவிட்டு. த்:சந்தி, தையல்-இளமையைப் பெற்ற காமாட்சி அம்மை. தழுவ-தம்மைக் கட்டி அணைக்க, க்:சந்தி, குழைந்த-குழைவை அடைந்த, பிரான்-தலைவனா கிய ஏகாம்பரேசுவரன். தங்கும்-தங்கி எழுந்தருளியிருக்கும். தெய்வ-தெய்வத்தன்மை வாய்ந்த, ப்:சந்தி. பதி-சிவத் தலம். என்று-என. வையம்-இந்த உலகத்தில் வாழும் மக்கள்; இடஆகுபெயர். முழுதும்-யாவரும்; திணை மயக்கம். தொழுது-தரையில் விழுந்து வணங்கிப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு, ஏத்தும்-துதிக்கும். மதில்-திரு மதில். சூழ்-சுற்றியிருக்கும். காஞ்சி-காஞ்சீபுரத்தினுடைய. மருங்கு-பக்கத்தை. அணைந்தார்.அந்த ந | ய னா ர் அடைந்தார். காஞ்சீபுரம்: இது திருக்கச்சி ஏகம்பம் எனவும் வழங்கும். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் ஏகாம்பரநாதர், ஏகாம்பரேசுவரர், பெரிய கம்பர் என்பவை: அம்பிகையின் திருநாமங்கள் ஏலவார்குழலி, காமாட்சி அம்மை என்பவை. தீர்த்தங்கள் சிவகங்கை, கம்பாநதி, முதலிய தீர்த்தங்கள். தலவிருட்சம் மர்மரம். இது பஞ்சபூதத் தலங்களில் பிருதுவித் தலம். காமாட்சியம்மையார் ஏகாம் பரேசுவரரைப் பூசை புரிந்தருளி முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்தருளிய தலம் இது. சிதம்பரம் முதலிய ஒவ்வொரு சிவத்தலத்திற்கும் எழுந்தருளிப் பல திருப்பணி களைப் புரிந்து தலத்துக்கு ஒவ்வொரு வெண்பாவாக rேத்திரத் திருவெண்பா என்ற நூலைப் பாடியருளிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அரசாட்சி புரிந்தருளிய தலம் இது. திருவெற்றியூரின் எல்லையைக் கடந்தவுடன் இரண்டு கண்களின் பார்வைகளையும் இழந்திருந்த சுந்தர மூர்த்தி நாயனார் இடக்கண் பார்வையைப் பெற்ற தலம்