பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பெரிய புராண விளக்கம்-7

அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்றபிரான் மருவாரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்தருளும் திருவாரூர். '
  • திருக்கயிலை வீற்றிருந்த

சிவபெருமான் திருக்கணத்தார் பெருக்கியசீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள். ' ஈரமதுவார் மல்ர்ச்சோலை எழிலா ரூர். ' என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க. அடுத்து உள்ள 215-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'திருநாவுக்கரசு நாயனார் திருநல்லூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் நம்பராகிய கலியான சுந்த ரேசுவரர் வழங்கிய திருவருளைப் பெற்றுக் கொண்டு, மேலே எழுந்தருளி பழையாறை முதலிய பற்கள் அமைந்த பிரம கபாலமாகிய வெள்ளைத் தலையைத் தம்முடைய திருக்கரத்தில் ஏந்தியவராகிய சிவபெருமானார் எழுந்தருளி யிருக்கும் தலங்கள் பலவற்றிற்கும் எழுந்தருளி அந்தத் தலங் கள் பலவற்றிலும் திருக்கோயில் கொண்டிருக்கும். சிவபெரு மான்களை வணங்கிவிட்டுஇனியசுவையைப் பெற்ற சொற்கள் அடங்கிய சொற்சுவை பொருட் சுவை ஆகிய வளப்பத்தைப் பெற்ற செந்தமிழ் மொழியில் அமைந்த திருப்பதிகத்தைப் பாடியருளி திருவலஞ்சுழிக்கும் எழுந்தருளிக் கற்பகநாகேசு வரரை வணங்கித் துதித்து இரவு நேரத்தில் வானத்தில் தவழும் வெண்மையாகிய பிறைச் சந்திரனைத் தம்முடைய தலையின் மேல் உள்ள சடாபாரத்தில் அணிந்தவராகிய கும்பேசுவரர் எழுந்தருளியிருக்கும் அழகிய குடமுக்கை அடைந்து அந்தக் கும்பேசுவரை വ ணங்கி பாடல் வருமாறு: ' கல்லூரில் கம்பர் அருள் பெற்றுப்போய்ப் பழையாறை