பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நா யனார் புராணம் 27 பல்லூர்வெண் டலைக்கரத்தார் பயிலும் இடம் பலபணிந்து சொல்லுணர்வண் டமிழ்பாடி வலஞ்சுழியைத் தொழுதேத்தி அல்லூர்வெண் பிறையணிந்தார் திருக்குடமூக் கணைந்திறைஞ்சி. ’ இந்தப் பாடல் குளகம், நல்லூரில்-திருநாவுக்கரசு நாயனார் திருநல்லூரில். நம்பர்-தம்முடைய அடியவர் களுக்குப் பல வகையாகிய நம்பிக்கைகளை உண்டாக்குபவர் ராகிய கலியாண சுந்தரேசுவரர். அந்த நம்பிக்கைகள் இன்ன என்பதை முன்பே ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. அருள்-வழங்கிய திருவருளை. பெற்று-பெற்றுக் கொண்டு. ப்:சந்தி. போய்.மேலே எழுந்தருளி. ப்: சந்தி, பழையாறை-பழையாறை முதலிய. பல்-பற்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஊர்-அமைந்த. வெண்டலை-பிரம கபால மாகிய வெள்ளைத் தலையை. க், சந்தி. கரத்தார். தம்மு டைய திருக்கர்த்தில் ஏந்தியவராகிய சிவபெரு மானார். பயிலும்-எழுந்தருளியிருக்கும். இடம்-தலங்கள்: ஒருமை பன்மை மயக்கம். பல-பலவற்றிற்கும் எழுந்தருளி பணிச்து. அந்தத் தலங்கள் பலவற்றிலும் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை அந்த நாயனார் வணங்கி விட்டு. சொல்-இனிய சுவையைபபெற்ற சொற்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஊர்-அடங்கிய. வண்-சொற். சுவை, பொருட்சுவை ஆகிய வளப்பத்தைப் பெற்ற. தமிழ்செந்தமிழ் மொழியில் அமைந்த திருப்பதிகத்தை ஆகு பெயர். பாடி-பாடியருளி. வலஞ்சுழியை-திருவலஞ்சுழிக்கும் எழுந்தருளி, உருபு மயக்கம். த்:சந்தி. தொழுது-கற்பக நாதேசுவரரை வணங்கி, ஏத்தி-துதித்து விட்டு. அல்-இரவு நேரத்தில். ஊர்.வானத்தில் தவழும். வெண்-வெண்மை நிறத்தைப் பெற்ற, பிறை-பிறைச் சந்திரனை. அணிந்தார்தம்முடைய தலையின் மேல் உள்ள சடாபாரத்தில் சூடியவ,