28 பெரிய புராண விளக்கம்-7 ராகிய கும்பேசுவரர். திருக்குடமூக்கு-கும்பேசுவரர் எழுந்தருளியிருக்கும் அழகிய குட மூக்காகிய கும்ப கோணத்தை. அணைந்து-அடைந்து. இறைஞ்சி-கும்பேசுவ ரரை வணங்கி விட்டு, - திருப்பழையாறை. இது பழையாறை வடதளி என்று வழங்கும். இங்கே கோயில் கொண்டிருப்பவர் சோமேசுவரர். அ ம் பி ைக சோமகலா நாயகி. தீ ர் த் த ம் ேசா ம. தீர்த்தம். இது பழையாறை என்றும், வடதளி என்றும் இரண்டு சிவத்தலங்களாக உள்ளன. பட்டிச்சுரத்திலிருந்து கிழக்குத் திசையில் கால் மைல் தூரத் தில் வடதளி இருக் கிறது. அங்கிருந்து 3/8 மைல் தூரத்தில் பம்பைப் படை என்னும் ஊர் உள்ளது. அங்கிருந்து தெற்குத் திசையில் சென்று திருமலைராயன் ஆற்றைக் கடந்து கால் மைல் சென்றால் பழையாறையை அடையலாம். இந்த இரண்டு சிவத்தலங்களையும் ஒரே திருப்பதிகத்தில் சேர்த்துத் திரு. நாவுக்கரசு நாயனார் பாடியருளியிருக்கிறார். அந்தப் பதிகத் தில் வரும் ஒரு திருக்குறுந் தொகை வருமாறு: " தலையெ லாம்பறிக் கும் சமண் கையர் உள் நிலையி னான்ம றைத்தால் மறைக்கொண்ணுமே அலையி னார் பொழில் ஆறை வடதளி நிலையி னான் அடி யேநினைந்து ய்ம்மினே.” வடதளியில் எழுந்தருளியிருப்பவருடைய திருநாமம் தருமபுரீசுவரர். அம்பிகை விமல நாயகி. இந்தச் சிவத்தலம் காமதேனுவினுடைய புதல்வியாகிய விமலி என்பவள் வழிபட்ட தலம். ஆலயம் ஒரு மேட்டின் மேல் இருக்கிறது. இங்கே தருமபுரீசுவரர், விமல நாயகி என்னும் இருவரையல் லாமல் வேறு யாருடைய விக்கிரகமும் இல்லை. இந்தத் திருக்கோயிலுக்கு அருகில் துறையூர் சிவப்பிரகாச சுவாமி களினுடைய சமாதிக் கோயில் உள்ளது. பழையாறை. சந்திரன் வழிபட்ட தலம். அமர்நீதி நாயனார் வாழ்ந்திருந்த தலமும் இதுவே. காமதேனுவினுடைய புதல்விகளுள் பட்டி
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/34
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
