திருநாவுக்கரசு நாயனார் புராணம் 29 என்பவள் வழிபட்ட தலம் பட்டீச்சுரம். விமலி வழிபட்ட தலம் பழையாறை வடதளி. பளிவழிபட்டது திருமேற்றளி. இந்தத் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவர்கள் கைலாச நாதர், சபள நாயகி என்பவர்கள். நந்தினி வழிபட்ட தலம் முழையூர், இங்கே கோயில் கொண்டிருப்பவர்கள் பரசு நாதேசுவரர்,ஞானாம்பிகை என்பவர்கள். இந்தத்தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய மற்றொரு திருக்குறுந்தொகை வருமாறு:
- நீதி யைக்கெட நின்றம ணே உனும்
சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன் ஆதி யைப்பழை யாறை வடதளிச் சோதி யைத்தொழு வார்துயர் திருமே." திருவலஞ்சுழி: இது சோழ நாட்டில் காவிரி நதியின் தென் கரையில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டி ருப்பவருடைய திருநாமங்கள் கற்பகநாதேசுவரர், கபர்த்தீ சுவரர் என்பவை, அம்பிகை பெரிய நாயகி. இது கும்ப கோணத்திற்கு, மேற்குத் திசையில் நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இந்திரன் வழிபட்ட தலம் இது. இந்தத் தலத்துக்கு வடக்குத் திசையில் அரிசிலாறு என்னும் ஆறு ஓடுகிறது. இங்கே எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானார் வெள்ளை விநாயகர். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து திருமால் பள்ளி கொண்டிருக்கும் பாற் கடலைக் கடைந்த போது இந்த விநாயகரை வழிபட்டமையால் அமுதம் திரண்டு எழுந்ததாகவும், இந்திரன் இந்த விநாயகரை வழி பட்டான். அவன் திருவலஞ்சுழிக்கு வந்த காலத்தில் இந்த விநாயகர் அந்தத் தலத்தில் நின்று விட்டதாகவும் ஆன்றோர் கூ று வ ர் . பி ர ம் ேம .ா ற் ச வ ம் முதலிய திருவிழாக்கள் இந்த விநாயகருக்கே நடைபெறு கின்றன. இந்த விநாயகரைத் தீண்டக் கூடாது என்பர். காவிரியாறு ஒரு பிலத்தில் சென்று விட்டதாகவும், அதை