பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக் கரசு நாயனார் புராணம் 31: மன்னு காவிரி வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி ஆதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே, பழம்பஞ்சுரப்பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: பள்ளம தாய படர்சடைமேற் பயிலும் திரைக் கங்கை வெள்ளம தார விரும்பி நின்ற விகிர்தன் விடையேறும் வள்ளல் வலஞ்சுழி வாண ைெ ன்று மருவி நினைந்தேத்தி உள்ளம் உருக உணருமின்கள் உறுநோய் அடையாவே. ' இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் திருக்குறுந் தொகை, திருத்தாண்டகம் என்பவை அடங்கிய, திருப்பதிகங்களைப் பாடியருளியுள்ளார். அவற்றுள் ஒரு. திருக்குறுந்தொகை வருமாறு: -

  • ’ ஒத மார்கடலின்விடம் உண்டவன் பூத நாயகன் பொற்கயி லைக்கிறை மாதொர் பாகன் வலஞ்சுழி ஈசனைப் பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே, இந்தத் தலத்தைப்பற்றிய ஒகு திருத்தாண்டகம் வருமாறு: -
  • அலையார் புனற்கங்கை நங்கை காண

அம்பலத்தில் அருநட்டம் ஆடி வேடம் தொலையாத வென்றியார் நின்றி யூரும் நெடுங்களமும் மேவி விடையை மேல்கொண்டு. - இலையார் படைகையில் ஏந்தி எங்கும் - இமையவரும் உமையவரும் இறைஞ்சி ஏத்த, மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த - வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே. ”

  • *