32 - பெரிய புராண விளக்கம்-7 அந்த நாயனார் திருவலஞ்சுழியையும், திருக் கொட்டை யூர்க் கோடிச் சரத்தையும் சேர்த்துப் பாடியருளிய ஒரு திருத் தாண்டகம் வருமாறு: ' கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய் கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய் பருமணிமா நாகம் பூண்டான் கண்டாய் பவளக்குன் றன்ன பரமன் கண்டாய் வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் குருமணிபோல் அழகமரும் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையும் கோமான்தானே, ’’ திருக்குடமூக்கு:இதுசோழநாட்டில்காவிரியாற்றின்தென் கரையில் உள்ள கும்பகோணம். இங்கே கோயில் கொண்டிருப் பவர் கும்பேசுவரர். அம்பிகை மங்கள நாயகி. தீர்த்தம் மகாமகத் திருக்குளம். இது ஹேம முனிவ்ர் முதலியவர்கள் வழிபட்ட தலம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் வரும் மகநட்சத்திரத்தில் காசியிலிருந்து கங்கையாறு வரும் ஐதிஹ்யம் ஒன்று உண்டு. இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: காமியம் செய்து காலம் கழியாதே. ஒமியம் செய்தங் குள்ளத் துணர்மினோ சாமி யோடு சரச்சு வதியவள் கோமி யும்உறை யும்குட மூக்கிலே. ” இந்தத் தலத்தைப் பற்றிப் பஞ்சமப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: - - மலைமலி மய்கை பாகம் மகிழ்ந் தான்.எழில் வையம் உய்யச் சிலைமலி வெங்கணையாற் சிதைத் தான்புரம் மூன்றினையும்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
