பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 33 குலைமலி தண்பல வின்பழம்வீழ் குடமுக் கிடமா இலைமலி சூலம் ஏந்தி இருந்தானவன் எம்மின்றயே. ' பிறகு வரும் 216-ஆம் பாடலின் கருத்து வருமாறு: திருநாலூர், தெற்குத் திசையில் விளங்கும் திருச் சேறை, குடவாயில், நறையூர், அதைச் சேர்ந்துள்ள இனிய சுவையைப் பெற்ற பாலைப் போன்ற வார்த்தைகளைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்பவளாகிய பெரிய அம்பிகை யைத் தம்முடைய வாமபாகத்தில் எழுந்தருளச் செய்தவ ராகிய பலாசவனேசுவரர், ஞானவல்லி சமேதராகிய செந் நெறியப்பர், பெரிய நாயகியம்மை சமேதராகிய கோணேசு வரர், அழகாம்பிகை சமேதராகிய சித்தநாதேசுவரர், மங்கள நாயகி சமேதராகிய வாஞ்சிலிங்கேசுவரர் ஆகிய சிவபெரு மான்களுடைய வெற்றிக் கழல்களைப் பூண்ட திருவடி களைப் புகழ்ந்து வணங்கிவிட்டு, தமக்கு மேலே தம்முடைய வாகனமாக இடபத்தையும், துவசமாக அந்த இடபத்தை யும் கொண்ட சிவபெருமானார் எழுந்தருளியிருக்கும் தலங்கள் பலவற்றிற்கும் அந்த நாயனார் எழுந்தருளி அந்த்த் தலங்களில் திருக்கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் களைப் பாடியருளிச் சேல்மீன்கள் தவழ்ந்து குதிக்கும் குளிர்ச்சியைப் பெற்ற வயல்கள் சுற்றியிருக்கும் தெற்குத் திசையில் உள்ள திருவாஞ்சியத்தை அடைந்தார். பாடல் வருமாறு: -

  • காலூர்தென் திருச்சேறை

குடவாயில் நறையூர்சேர் பாலுணரும் இன்மொழியாள் பாகனார் கழல்பரவி மேலுர்தி விடைக்கொடியார் மேவும்இடம் பலபாடிச்