36 பெரிய புராண விளக்கம்-7 经历 யார்ப்யில் சேறையும் செந்நெறி நாரி பாகன் நாமம் நவிலவே.' இந்தத் தலத்தைப் பற்றிச் சாதாரிப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: முறியுறு நிறம்மல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன் வெறியுறு மதகரி அதன்பட உரிசெய்த விறவினர் நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை செறியுறு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே.' இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார். திருநேரிசை, திருக்குறுந்தொகை என்பவை அடங்கிய திருப் பதிகங்களைப் பாடியருளியிருக்கிறார். அவற்றுள் ஒரு திரு நேரிசை வருமாறு: - ' ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உவப்பில் காலம் நின்றுதம் கழல்கள் ஏத்தும் நீள்சிலை விசய னுக்கு வென்றிகொள் வேட னாகி விரும்பிவெங் கான கத்துச் சென்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே...' திருக்குடவாயில் : இது சோழ நாட்டில் உள்ள சிவத் தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் கோணேசுவரர். அம்பிகை பெரியநாயகி அம்மை. இது கொரடாச்சேரி என்னும் ஊருக்கு வடக்குத் திசையில் எட்டு மைல் தூரத்தில் உள்ளது. திருணபிந்து என்னும் முனிவர் பூசிக்கக் கோணேசு து ரர் ஒரு குடத்திலிருந்து வெளிப்பட்டு அந்த முனிவருக்கு
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/42
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
