பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 37 இருந்த குட்ட நோயைப் போக்கியருளிய தலம் இது. இதைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு : " திகழும்திரு மாலொடு நான்முகனும் புகழும்பெரு மான் அடி யார்புகல மகிழும்பெரு மான்குட வாயில்மன்னி நிகழும்பெரும் கோயில் நிலாயவனே.” இந்தத் தலத்தைப் பற்றித் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் இந்தளப் பண்ணிலும், காந்தாரப் பண்ணிலும் திருப்பதிகங்களைப் பாடியருளியிருக்கிறார். அ வ ற் று ன் இந்தளப்பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு : கலையான் மறையான் கனலேந் துகையான் மலையா ளவள்பா கமகிழ்ந்த பிரான் கொலையார் சிலையான் குடவா யில்தனில் நிலையார் பெருங்கோ யில் நிலாயவனே." காந்தாரப் பண்ணில் அந்த நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : . ' கலைவாழும் அங்கையீர் கொங்கை யாரும் கருங்கூந்தல் அலைவாழும் செஞ்சடையில் w அரவும் பிறையும் அமர்வித்தீர் குலைவாழை கமுகம்பொன் பவளம் பழுக்கும் குடவாயில் நிலைவாழும் கோயிலே கோயி லாக நின்றீரே.” திருநறையூர் : இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் சித்தநாதேசுவரர். அம்பிகை அழகம்பிகை. இது கும்பகோணத்திற்குத் தென் கிழக்குத் திசையில் ஐந்தரை மைல் தூரத்தில் உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் விநாயகர் ஆண்டபிள்ளையார். பிரம தீர்த்தம் திருக்கோயிலுக்கு வடக்கே உள்ளது. இங்கே உள்ள ஆலயத்துக்குச் சித் திச்சுரம் என்பது பெயர். இதைப். பற்றிய ஒரு பாசுரம் வருமாறு : s .