38 பெரிய புராண விளக்கம் -7 பிறைகொள் சடையர் புலியின் உரியர் பேழ்வாய் நாகத்தர் கறைகொள் கண்டர் கபாலம் ஏந்தும் Gũ) g; lL! fT #; [E# 35#” 6ff Pr மறைகொள் கீதம் பாடச் சேடர் மனையின் மகிழ்வெய்திச் சிறைகொள் வண்டு தேனார் நறையூர்ச் சித்திச் சுரத்தாரே...' - இந்தத்தலத்தைப் பற்றிக் குறிஞ்சிப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : " நீரும் மலரும் நிலவும் சட்ைமேல் - ஊரும் அரவம் உடையான் இடமாம் வாரும் அருவி மணிபொன் கொழித்துச் சேரும் நறையூர்ச் சித்தீச் சரமே. ’’ திருவாஞ்சியம் : இது சோழ நாட்டில் உள்ள சிவத் தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங் கள் வாஞ்சி லிங்கேசுவரர், வாஞ்சிநாதர் என்பவை, அம்பி கையின் திருநாமங்கள் மங்கள நாயகி, வாழவந்த நாயகி என்பவை, தல விருட்சம் சந்தன மரம். தீர்த்தம் குப்த கங்கை. இது திருவாரூருக்கு வடமேற்குத் திசையில் 11 மைல் துாரத்தில் உள்ளது. இந்தத் தலம் புத்தாறு என்னும் ஆற்றிற்கு வடகரையில் உள்ளது. இது திருமால் வாஞ்சி லிங்கேசுவரரைப் பூசித்துத் தம்மைவிட்டு பிரிந்து போயிருந்த - திருமகளை மீண்டும் அடையப் பெற்ற தலம். திருவாஞ்சி யம்-திருவைத் திருமால் வாஞ்சித்த இடம். வாஞ்சித்தவிரும்பிய, சந்தனமரம் ஆலயத்தின் பிராகாரத்தில் இருக் "கிறது. குப்தகங்கை என்னும் தீர்த்தம் ஆலயத்துக்கு வடக் குத் திசையில் இருக்கிறது. கார்த் திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் திர்த்தத்தில் நீராடுவது சிறப்பு என்பர். இந்தத் தலத்தில் இறப்பவர்களுக்கு யமனு டைய வாதனை இல்லை என்பர். தி ரு க் கோ யி லி ல்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/44
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
