பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 39 யமனுக்குத் தனியாக ஒரு சந்நிதி உள்ளது. காசிக்கு நிகரா கக் கூறப்படும் தென்னாட்டுத் தலங்கள் ஆறுக்குள் இது ஒன்று. இந்தத் தலத்தைப் ப்ற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு : " அங்கம் ஆறும் அருமறை நான்குடன் தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர் செங்கண் மாலிட மார் திரு வாஞ்சியம் தங்கு வார்நம் அமரர்க் கமரரே. ' இந்தத் தலத்தைப் பற்றி இந்தளப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பர்சுரம் வருமாறு: . - " வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்றகடை யிற்பொலி வித்த புராணனார் தென்ன என்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம் என்னை ஆருடை யானிடம் ஆக உகந்ததே. , , . இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் கபாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு : . படையும் பூதமும் பாம்பும்புல் வாயதன் உடையும் தாங்கிய உத்தம ை ார்க்கிடம் புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம் அடைய வல்லவர்க் கல்லல்ொன் றில்லையே. இத்தத் தலத்தைப் பற்றிப் பியந்தைக் காந்தாரப் பண்ணில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : , பொருவனார்புரி நூலர் புணர்முலை உமையவளோடு

  1. * *