பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் -- 4t. பெரு-பெருகி வீசும். வாச-நறுமணத்தைப் பெற்ற" மலர்-மலர்கள் மலர்ந்திருக்கும் பல வகையாகிய மரங்கள் வளர்ந்து நி ற் கு ம். ம ல ர் : ஒ ரு ைம ப ன் ைம. La tu &# 5 lb. ச் : ச ந் தி. சோலை-பூம்பொழிலைப் பெற்ற, ப்:சந்தி. பெருவேளுர்-பெருவேளுருக்குத் திரு. தாவுக்கரசு நாயனார் எழுந்தருளி, ப னி ந் து -பிரியா ஈசுவரரை வணங்கி, ஏத்தி-துதித்துவிட்டு. முருகு-நறுமணம். ஆரும்-நிறைந்திருக்கும். மலர்க்கொன்றை-கொன்றைமலர் மாலையை அணிந்திருக்கும்; ஆகுபெயர். முதல்வனார்எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவராகிய சிவபெருமா னார். பதி-திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்கள்; ஒருமை பன்மை மயக்கம். பிறவும்.பிறவற்றிற்கும். அந்த நாயனார் எழுந்தருளி. திரு-அழகு; செல்வத்தைப் படைத்தவர்கள்' எனலும் ஆம்; திணை மயக்கம். ஆரும்" நிரம்பியிருக்கும்; நிரம்பி வாழும். விளமருடன்-திருவிள மருக்கு உடனே. சென்று-எழுந்தருளி. இறைஞ்சி-பதஞ்சலி மனோகரேசுவரரை வணங்கிவிட்டு. வாகீசர்-வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார். மருவார்-பகைவர்களாகிய தார காட்சன், வித்யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர் களுடைய, ஒரு மை பன்மை மயக்கம். ஊர்-பறக்கும் கோட்டைகளாகிய மூன்று புரங்களை ஒருமை பன்மை மயக்கம். எரித்தவர் தம்-எரித்தருளியவராகிய தியாகராஜப் பெருமானார். தம்:அசைநிலை. திருவாரூர்-திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவாரூருக்கு. வந்து-அந் நாயனார் எழுந்தருளி. அடைந்தார். சேர்ந்தார். திருப்பெருவேளுர்: இது சோழநாட்டில் உள்ள சிவத். தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் பிரியா ஈசுவரர். அம்பிகை மின்னனையாள் அம்மை. இது இக்காலத்தில் காட்டுர் ஐயன்பேட்டை என வழங்கும். இது தலையாலங். காட்டிலிருந்து கிழக்குத் திசையில் மூன்று மைல் தூரத்தில்