4. பெரிய புராண விளக்கம்-7 பாரத்தைத் தம்முடைய திருமுடியிற் பெற்றவராகிய தியாக ராஜப் பெருமானாரிடத்தில் நிரம்பிய திருவருளைப் பெற்றுக் கொண்டு அடியேங்களை அடிமைகளாக உடையவராகிய அந்த நாயனார் பார்க்கத் தகுதியைப் பெற்ற திருமாளிகை களும், மாடங்களும் அழகு சிறந்து ஓங்கி நிற்க, எல்லா இடங்களிலும் நெடுந்துாரத்திற்கு ஒளியை வீசிக்கொண்டு விளங்கும் திருவீதிகள் தோற்றப் பொலிவோடு விளங்கச் செல்வம் மிகுதியாக உள்ள மங்கல காரியங்களை அந்த விதி களில் உள்ள திருமாளிகைகளில் வாழும் மக்கள் புரிந். தார்கள். பாடல் வருமாறு: - ' ஆண்டஅர செழுந்தருள ஆரூரில் அன்பர்கள்தாம் நீண்டசடை முடியார்பால் நிறைந்த அருள் பெற்றுடையார் காண்டகுமாளிகைமாடம் கவின்சிறந்தோங் கிடஎங்கும் சேண்டிகழ்வி திகள் பொலியத் திருமலிமங்கலம்செய்தார். ' ஆண்ட- அவ்வாறு திருவதிகை வீரட்டானேசுவரர் தடுத்து ஆட்கொண்ட அரசு-திருநாவுக்கரசு நாயனார்: திணை மயக்கம், எழுந்தருள-தங்களுடைய நகரத்திற்கு எழுந்தருள. ஆரூரில்-திருவாரூரில் வாழும். அன்பர்கள் தாம்-தியாகராஜப் பெருமானாருடைய பக்தர்கள். தாம்: அசைநிலை. நீண்ட-நீளமாக உள்ள ச ைட - ச டா பாரத்தை. முடியார்பால் தம்முடைய திருமுடியிற் பெற்றவ ராகிய தியாகராஜப் பெருமானாரிடத்தில். நிறைந்தநிரம்பிய . அருள்-திருவருளை. பெற்று-அந்த நாயனார் பெற்றுக் கொண்டு. உடையார்-அடியேங்களை அடிமை களாக உடையவராகிய அந்த நாயனார். அடியேங்கள்” என்றது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர்களையும்.
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/50
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
