பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பெரிய புராண விளக்கம்-7 களைத் தம்முடைய தலையின்மேல் வைத்துக் கூப்பிக் கும். பிட்டு விட்டுப் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு அந்த நகரத்துக்குள் அடைவாரானார். பாடல்: வருமாறு: - வல்லமண் குண்டர் தம் மாயைகடந்து மறிகடலில் கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும்களிப்பால் எல்லையில் தொண்டர் எயிற்புறம் சென்றெதிர் கொண்டபோது சொல்லின் அரசர் வணங்கித் தொழுதுரை செய்தணைவார். வல்-வலிமையைப் பெற்ற. அமண்-சமணர்களாகிய: ஒரு மை பன்மை மயக்கம்; திணை மயக்கம். குண்டர்தம்இழிந்தவர்கள் புரிந்த ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. மாயை-மாய மந்திரங்களால் உண்டான துன் பத்தை; ஒருமை பன்மை மயக்கம்; ஆகுபெயர். கடந்து 3 * தாண்டி. மறி-அலைகள் சுருண்டு வீசும். கடலில்-சமுத். திரத்தில். கல்வே-தப் மை அந்தச் சமணர்கள் கட்டித், தள்ளிய கருங்கல்லே. மிதப்பாக ஒரு தெப்பமாக மாற. ப்:சந்தி, போந்தவர். அதன் மேல் ஏறிக்கொண்டு கரையை அடைந்தவராகிய திருநாவுக்கரசு நாயனார். வந்தார்-நம்மு. டைய திருவாரூருக்கு எழுந்தருளினார். எனும்-என்று எண் னும்; இடைக்குறை. களிப்பால்-மகிழ்ச்சியினால், எல்லைகணக்கு. இல்-இல்லாத, கடைக்குறை. தொண்டர்திருத்தொண்டர்கள்: ஒருமை பன்மை மயக்கம். எயில்அந்தத் திருநாவுக்கரசு நாயனாரை திருமதிலுக்கு. புறம். வெளியில் சென்று-போய், எதிர்கொண்ட எதிர் கொண்டு வரவேற்ற போது-சமயத்தில். சொல்லின்-வார்த்தை களுக்கு; ஒருமை பன்மை மயக்கம். அரசர்-அரசராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார். வணங்கி-தியாகராஜப்