திருநாவுக்கரசு நாயனார் புராணம் 49 வன்மீக நாதரை அவருடைய சந்நிதியில் அந்த நாயனார் தரிசித்து ஆனந்தத்தைப் பெற்றார். பாடல் வருமாறு: சூழும் திருத்தொண்டர் தம்முடன் - தோரண வாயில் கண்ணி வாழி திருநெடும் தேவா சிரயன்முன் வந்தி றைஞ்சி ஆழி வரைத்திரு மாளிகை வாயில் அவை புகுந்து நீள்சுடர் மாமணிப் புற்றுகந் தாரைநேர் கண்டு கொண்டார். ' சூழும்.தம்மைச் சுற்றிவரும். திருத் தொண்டர் தம் முடன்-திருத்தொண்டர்களோடு: ஒருமை பன்மை மயக்கம் தம்: அசைநிலை. தோரண-அந்தத் திருநாவுக்கரசு நாய :னார் திருவாரூர்த் திருக்கோயிலுக்கு முன்னால் தோரணங் களைக் கட்டித் தொங்கவிட்டிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். வாயில்-கோபுரவாசலுக்கு. நண்ணி-எழுந்தருளி, வாழி: அசைநிலை. திரு-அழகிய. நெடும்-உயரமாக விளங் கும். தேவாசிரயன்.தேவாசிரயன் என்னும் காவனத் துக்கு. முன்-முன்னால். வந்து-அந்த நாயனார் எழுந்தருளி. இறைஞ்சி-தியாகராஜப் பெருமானாரை வணங்கிவிட்டு. ஆழிவரை-சக்கரவாள மலையைப்போல உயரமாக நிற்கும். த்:சந்தி. திரு-அழகிய. மாளிகை-திருக்கோயிலுக்கு முன் னால் உள்ள. வாயில் அலை-கோபுரவாசலுக்குள். அவை' என்பது மிகை. புகுந்து-நுழைந்து. நீள்-நீளமாகிய. சுடர்ஒளியை வீசும். மா-பெருமையைப் பெற்ற. ഥങ്ങിநாக மாணிக்கங்களை உமிழும்: ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. புற்று-பாம்புப் புற்றை. உகந்தாரை-மகிழ்ச்சியை அடைந்து தாம் எழுந்தருளி யிருக்கும் இடமாகக் கொண்ட வன்மீக நாதரை. நேர்-அவருடைய சந்நிதியில். கண்டு தி-4,
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/55
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
