பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பெரிய புராண விளக்கம்-? தரிசித்து. கொண்டார்-ஆனந்தத்தை அந்த நாயனார். பெற்றார். - பிறகு உள்ள 222-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அவ்வாறு அந்தத் திருநாவுக்கரசு நாயனார் வன்மீக. நாதரைத் தரிசித்து விட்டுத் தரையில் விழுந்து அவரை வணங்கித் தம்முடைய திருக்கரங்கள், திருவடிகள் முதலிய உறுப்புக்கள் அடைந்த புள காங்கிதமாகிய மயிர்க்கூச்சு உண்டாகுமாறு தரையிலிருந்து எழுந்து நின்றுகொண்டு பக்தி மிகுதியாக உண்டாகத் தம்முடைய விழிகள் குளிர்ச்சி யைப் பெற்ற துளிகளாகிய மழையைச் சொரியத் திருமூலட். டானராகிய வன்மீக நாதரை அவருடைய செந்தாமரை மலர்களைப் போன்றவையும், வெற்றிக் கழலைப் பூண்டு விளங்குபவையுமாகிய திருவடிகளை வாழ்த்தி வணங்கி விட்டு ஒரு திருத்தாண்டகத்தை அந்த வன்மீக நாதருக்கு. அணிந்து. பாடல் வருமாறு: கண்டு தொழுது விழுந்து கரசர ணாதி அங்கம் கொண்ட புளகங்க ளாக எழுந்தன்பு கூரக் கண்கள் தண்டுளி மாரி பொழியத் திருமூலட் டானர் தம்மைப் புண்டரி கக்கழல் போற்றித் திருத்தாண் டகம்பு னைந்து.' - இந்தப் பாடல் குளகம். கண்டு.அவ்வாறு அந்தத்திரு. நாவுக்கரசு நாயனார் வன்மீக நாதரைத் தரிசித்துவிட்டு. தொழுது-தரையில் விழுந்து அந்தநாதரை வணங்கி, கர-தம் முடைய திருக்கரங்கள்; ஒருமை பன்மை மயக்கம். சரணதிருவடிகள்: ஒருமை பன்மை மயக்கம். ஆதி-முதலிய. அங்கம்-உறுப்புக்கள்; ஒருமை பன்மை மயக்கம். கொண்டஅடைந்த புள கங்கள் ஆக. புள காங்கிதமாகிய மயிர்க். கூச்சுண்டாகுமாறு. எழுந்து-தரையிலிருந்து எழுந்து நின்று.