திருநாவுக்கரசு நாயனார் புராணம் 51: . கொண்டு. அன்பு-பக்தி. கூர-மிகுதியாக உண்டாக. க்:சந்தி. கண்கள். தம்முடைய விழிகள். தண்-குளிர்ச்சியைப் பெற்ற. துளி-துளிகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். மாரிமழையை. பொழிய-சொரிய, த்:சந்தி. திருமூலட்டானர் தம்மை-திருமூலட்டானராகிய வன்மீக நாதரை. மூலட்டா ர்ை-மூலத்தானத்தில் எழுந்தருளியிருப்பவர். தம்: அசை நிலை. ப்:சந்தி. புண்டரிக-செந்தாமரைமலர்களைப்போன்ற வையும் ஒருமை பன்மை மயக்கம்; வினையாலணையும் பெயர். க்:சந்தி. கழல்-வெற்றிக்கழலைப் பூண்டு விளங்கு பவையுமாகிய திருவடிகளை ஆகுபெயர். போற்றிவாழ்த்தி வணங்கி விட்டு. த்:சந்தி. திருத் தாண்டகம்ஒரு திருத்தாண்டகத்தை புனைந்து-அந்த வன்மீக நாத ருக்கு அணிந்து. - - திருவாரூரைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடி யருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள் - தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே. திருநாவுக்கரசு நாயனார் திருவாரூரைப்பற்றிக் காந் தாரப் பண்ணிலும், கீகாமரப் பண்ணிலும், குறிஞ்சிப் பண் னிலும் அமைந்த திருப்பதிகங்களையும், திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம், போற்றித் திருத்தாண்டகம் என்பவை அடங்கிய திருப்பதி கங்களையும் பாடியருளி யிருக்கிறார். அவற்றுள் காந்தாரப் பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு:
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
