பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 57. மருவனாய் மண்ணும்விண்ணும் தெரித்த நாளோ மான்மறிக்கை ஏந்தியோர் மாதோர் பாகம் திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. ' இந்தத் தலத்தைப் பற்றித் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குறிஞ்சிப் பண்ணில் பாடியருளிய திருவிருக்குக் குறள் ஒன்று வருமாறு: " சித்தம் தெளிவீர்காள்-அத்தன் ஆரூரைப் பத்தி மலர்தூவ-முத்தி ஆகுமே." இந் தத் தலத்தைப் பற்றிக் கொல்லிப்பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: - பறக்கும்எம் கிள்ளைகாள் பாடும்எம் பூவைகாள் அறக்கண் என் னத்தகும் அடிகளா ரூரரை மறக்ககில் லாமையும் வளைகள் நில் லாமையும் உறக்கம் இல்லாமையும் உணர்த்தவல் வீர்களே .” கொல்லிக் கெளவாணப் பண்ணில் அந்த நாயனார். பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: r ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகி மாழையொண் கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே. ’’ அந்த நாயனார் தக்கேசிப் பண்ணில் பாடியருளிய ஒரு. பாசுரம் வருமாறு: - " பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் போக மும்திரு வும்புணர்ப் பானைப் :