பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 59. மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதிரே...' அடுத்து உள்ள 223-ஆம் கவியின் கருத்து வருமாறு: காண்ட லேகருத் தாய்நினைந் தென்று தொடங் கும் கலைத் தன்மையைப் பெற்ற ஒரு திருப்பதிகத்தை தூண் .டாத திருவிளக்கைப் போன்ற சோதியாகிய வன்மீக நாத ருடைய சந்நிதியில் அந்தத் திருநாவுக்கரசு நாயனார் நின்று கொண்டு அந்த வன்மீக நாதரைத் துதித்துப் பக்தியினால் .உருக்கத்தை அடைந்து சேர்ந்திருக்கும் அடிக்கும் மணியைக் கட்டித் தொங்கவிட்டிருக்கும் கோபுர வாசலைப் பெற்ற திருக்கோயிலைச் சுற்றி வலமாக வந்து அந்த நாதரை வணங்கி பக்தியைக் கொண்ட திருவுள்ளத்தோடு உயரமாக உள்ள அழகிய கோபுர வாசலுக்கு வெளியே அந்த நாயனார் எழுந்தருளினார். பாடல் வருமாறு : - காண்ட லேகருத் தாய்நினைங்’ தென்னும் கலைப் பதிகம் தூண்டா விளக்கன்ன சோதிமுன் கின்று துதித் துருகி ஈண்டு மணிக்கோயில் சூழ வலஞ்செய் திறைஞ்சி அன்பு பூண்ட மனத்தொடு நீள்திரு வாயிற் புறத்த னைந்தார்.' காண்டலே கருத்தாய் நினைந்து' என்னும்-'காண்டலே கருத்தாய் நினைந்து' என்று தொடங்கும். கலை-கலைத் தன்மையைப் பெற்ற. ப்:சந்தி. பதிகம்-ஒரு திருப்பதிகத்தை. துாண்டா-துாண்டாத, விளக்கு-திருவிளக்கை; தீபத்தை. அன்ன-போன்ற சோதிமுன்-சோதியாகிய வன்மீக நாத ருடைய சந்நிதியில், நின்று. அந்தத் திருநாவுக்கரசு நாய கனார் நின்று கொண்டு. துதித்து-அந்த வ்ன்மீக நாதரைத் தோத்திரம் செய்து. உருகி.பக்தியினால் உருக்கத்தை