60 பெரிய புராண விளக்கம்-7 அடைந்து. ஈண்டு. சேர்ந்திருக்கும். மணி-அடிக்கும் மணி யைக் கட்டித் தொங்க விட்டிருக்கும், க்:சந்தி. கோயில். கோபுர வாசலை முன்னால் பெற்ற திருக்கோயிலை. சூழசுற்றி, வலம் செய்து-வலமாக வந்து. இறைஞ்சி-அந்த நாதரை 'வணங்கி. அன்பு-பக்தியை. பூண்ட-கொண்ட மனத்தொடு-திருவுள்ளத் தோடு. நீள்-உயரமாக உள்ள. திரு அழகிய வாயில்-கோபுர வாசலுக்கு. புறத்து-வெளி யில். அணைந்தார்-அந்த நாயனார் எழுந்தருளினார். இந்தப் பாட வில் குறிப்பிட்ட பாசுரம் திருநாவுக்கரசு நாயனார் சீகாமரப் பண்ணில் திருவாரூரைப் பற்றிப் பாடி யருளியது. அந்தப் பாசுரம் வருமாறு: y " காண்ட லேகருத் தாய் நினைந்திருந் தேன்.மனம் புகுந்தாய் கழலடி பூண்டு கொண் டொழிந்தேன் புறம் போயினால் அறையோ ஈண்டு மாடங்கள் நீண்டமாளிகை மேலெழு கொடி வாணிளம்மதி தீண்டி வந்துலவும் - திருவாரூர் அம்மானே.” பிறகு வரும் 224-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் சிவப்பாக உள்ள பெரிய மாணிக்கம் ஒளியை வீசும் அழகிய ஆலயத்தினுடைய முற்றத்திற்கு முன்னால் விளங்கும் தேவாசிரயன் என்னும் காவணத்தை அந்த நாயனார் அடைந்து, 'கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ மயிலாலும் ஆருராரைக், கையி னால் தொழா தொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வ. னேன்.’’ என்று தொடங்கி அடைவதற்கு அருமையாக உள்ள கழிவிரக்கத்தோடு ஒரு திருப்பதிகத்தை அந்த நாய னார் திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு அந்தத் திருவா ரூரில் உள்ள தம்முடைய திருமடத்தில் தங்கிக் கொண்டிருந் தார். பாடல் வருமாறு : -
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/66
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
