திருநாவுக்கரசு நாயனார் புராணம் 61. செய்யமா மணிஒளிரும் திருமுன்றில் முன்தேவா சிரயன் சார்ந்து கொய்யுலாம் மலர்ச் சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூராரைக் கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேன்' என் றெப்தரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்தங் கிருந்தார் அன்றே.” செய்ய.அந்தத் திருநாவுக்கரசு நாயனார் சிவப்பாக உள்ள. மா-பெரிய. மணி-மாணிக்கம். ஒளிரும்-ஒளியை வீசும். திரு-அழகிய. முன்றில்-ஆலயத்தினுடைய முற்றத் திற்கு. முன்றில்-இல்முன்; முன்பின்னாகத் .ெ த எ க்க தொகை. முன்-முன்னால் விளங்கும். தேவாசிரயன்-தேவா சிரயன் என்னும் காவணத்தை. சார்ந்து-அந்த நாயனார் அடைந்து. கொய்யுலாம் மலர்ச் சோலைக் குயில்கூவ மயி லாலும் ஆரூராரைக், கையினால் தொழா தொழிந்து கனி யிருக்கக் காய் கவர்ந்த கள்வனேன்' என்று-கொய்யுலாம் மலர்ச் சோலைக் குயில் கூவ மயிலாலும் ஆரூராரைக் கையி னால் தொழா தொழிந்து கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வ னேன்’ என்று தொடங்கி. எய்தரிய-அடைவதற்கு அருமை யாக உள்ள. எய்தரிய-எய்த அரிய தொகுத்தல் விகாரம். கையறவால்-கழிவிரக்கத்தோடு, உருபு மயக்கம். திருப்பதி கம்-ஒரு திருப்பதிகத்தை. அருள் செய்து-அந்த நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு. அங்கு-அந்தத் திரு வாரூரில் உள்ள தம்முடைய திருமடத்தில். இருந்தார்.தங் கிக் கொண்டிருந்தார். அன்று. ஏ:இரண்டும் ஈற்றசை நிலைகள். இந்தப் பாடலில் குறிப்பிட்ட பாசுரம் திருஆரூரைப் பற்றிக் காந்தாரப் பண்ணில் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளியது. அந்தப் பாசுரம் வருமாறு:
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/67
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
