62 பெரிய புராண விளக்கம்-7
- மெய்யெலாம் வெண்ணிறு கண்ணித்த
மேனியன் தாள்தொ ழாதே உய்யலாம் என்றெண்ணி உறிதுரக்கி உழிதந்தென் உள்ளம் விட்டுக் கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூ ரரைக் கையினால் தொழா தொழிந்து கணியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே. இது ஒரு பழமொழியை உள்ளடக்கியது. பிறகு வரும் 225-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: திருநாவுக்கரசு நாயனார் தம்முடைய திருமார்பு நிரம்பச் சொரியும் கண்களிலிருந்து மழையைப் போலப் பொழிந்து வழியும் அழகிய வடிவத்தையும், இனிமையாக உள்ள தம்முடைய திருவாக்கில் சேர்ந்து அமையும் அழகிய தம்முடைய திருவாயிலிருந்து வெளியாகும் இனிய சுவை யைப் பெற்று விளங்கும் செந்தமிழ் மொழியில் அமைந்: திருக்கும் மாலைகளாகிய பல திருப்பதிகங்களையும் திரு. வதிகை விரட்டானேசுவரருடைய சிவந்த தங்கத்தைப் போன்ற திருவடிகளையே சார்பாகப் பெற்ற திருவுள்ளத். தையும் உழவாரம் என்னும் ஒப்பற்ற ஆயுதத்தையும். கொண்டு தாமும் ஆக விளங்கி இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள் நல்ல வாழ்வைப் பெறுமாறு அந்தத் திரு. வாருரில் உள்ள ஓர் அழகிய தெருவில் உழவாரத் திருப்பணி யையும், வேறு பல திருப்பணிகளையும் புரிந்து கொண்டு: அந்த வன்மீக நாதரை வணங்கித் துதித்துப் புகழ்ந்து பாடி, யருளி நடப்பாரானார். பாடல் வருமாறு: r மார்பாரப் பொழிகண்ணிர் மழைவாரும் திருவடிவும் மதுர வாக்கில் சேர்வாகும் திருவாயில் தீந்தமிழின் மாலைகளும் செம்பொற் றாளே