«są - பெரிய புராண விளக்கம்-7 திருவாரூரைப் பற்றிக் காந்தாரப் பண்ணில் திருநாவுக் கரசு நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: ஆயிரம் தாமரை போலும் - ஆயிரம் சேவடி யானும் ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடை யானும் ஆயிர ஞாயிறு போலும் - ஆயிரம் நீள்முடி யானும் ஆயிரம் பேருகந் தானும் ஆரூர் அமர்ந்தஅம் மானே.” •. அடுத்து வரும் 226-ஆம் கவியின் கருத்து வருமாறு : அந்தத் திருநாவுக்கரசு நாயனார் நெடுங்காலமாக விளங்கும் புகழைப் பெற்ற திருவாரூரில் நிலாவும் மாணிக் கத்தை உமிழும் பாம்புப்புற்றைத் தாம் எழுந்தருளியிருக்கும் இடமாகக் கொண்ட திருநடனம் புரிபவராகிய வன்மீக நாதரைத் தம்முடைய திருவுள்ளத்தில் சேர்ந்திருந்த பக்தி யோடு ஒவ்வொரு பூசை காலத்திலும் வன்மீக நாதர் எழுந் தருளியிருக்கும் திருக்கோயிலை அடைந்து தம்முடைய கை களைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டுவிட்டு ஒரு குற்றமும் இல்லாத தம்முடைய திருவா யின் பான்மையினால், "பாடிளம் பூதத்தினான்’ என்று தொடங்கும் ஒரு திருப்பதிகத்தையும், அந்தத் திருப்பதிகம் முதலாக உள்ள பல திருப்பதிகங்களையும் அந்த நாயனார் பாடியருளித் தாம் விரும்பிய பேராவல் பெருகி எழத் தம் முடைய திருவுள்ளம் உருக்கத்தை அடைந்து தம்முடைய திருவுள்ளம் கரைந்து கரைந்து உருக்கத்தைப் பெற்று விரும்பி நடப்பாரானார். பாடல் வருமாறு:
- டுேபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப்
.டிற்றிடம்கொள் கிருத்தர் தம்மைக் கூடிய அன் பொடுகாலங்களில்அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப் * *