திருநாவுக்கரசு நாயனார் புராணம் , - 65 'பாடிளம்பூ தத்தினான்’ எனும்பதிகம் முதலான பலவும் பாடி நாடிய,ஆர் வம்பெருக நைந்துமணம் கரைந்துருகி நயந்து செல்வார்." நீடு-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் நெடுங்காலமாக விளங்கும். புகழ்-புகழைப் பெற்ற. த்:சந்தி. திருவாரூர்திருவாரூரில். நிலவு-நிலாவும்; எழுந்தருளியிருக்கும். மணிநாகமாணிக்கத்தை உமிழும். ப்:சந்தி. புற்று-பாம்புப் புற்றை. இடம்-தாம் எழுந்தருளியிருக்கும் இடமாக. கொள். கொண்ட நிருத்தர்தம்மை - திருநடனம் புரிந்தருளுபவ ராகிய வன்மீக நாதரை. தம்: அசைநிலை, வன்மீக நாதரை இருந்தாடழகர் என்பர். க்:சந்தி. கூடிய-தம் முடைய திருவுள்ளத்தில் சேர்ந்திருந்த, அன்பொடு-பக்தி யோடு. காலங்களில்-ஒவ்வொரு பூசைக் காலத்திலும், அணைந்து-வ்ன்மீகநாதர் எழுந்தருளியிருக்கும் தி ரு க் கோயிலை அடைந்து. கும்பிட்டு-தம்முடைய கைகளைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டு விட்டு. க்:சந்தி, கோது-ஒரு குற்றமும். இல்-இல்லாத; ஆடைக்குறை. வாய்மை-தம்முடைய திருவாயின் பான்மை .யினால், ப்:சந்தி. பாடிளம் பூதத்தினான்’ எனும்- பாடிளம் பூதத்தினான் என்று தொடங்கும். எனும்:இடைக்குறை. பதிகம்-ஒரு திருப்பதிகத்தை. முதலான-முதலாக உள்ள. பலவும்-பல திருப்பதிகங்களையும். பாடி-அந்த நாயனார் பாடியருளி. நாடிய-தாம் விரும்பிய. ஆர்வம்-பேராவல். பெருக-பெருகி எழ, நைந்து-உருக்கத்தை அடைந்து. மனம்தம்முடைய திருவுள்ளம். கரைந்து-கரைந்து கரைந்து. உருகி-உருக்கத்தைப் பெற்று. நயந்து-விரும்பி. செல்வார். நடப்பாரான்ார். இந்தப் பாடலில் குறிப்பிட்ட பாசுரம் காந்தாரப்பண் அமைந்தது. அந்தப் பாசுரம் வருமாறு: தி-5
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/71
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
