2 + பெரிய புராண விளக்கம்-- தொடைமாலைத்திருப்பதிகம் சொன்மாலை' பாடினார். ’’ புடை-தம்முடைய தலையின் பக்கத்தில், மாலை-மாலை. நேரத்தில் உதயமாகும். மதி-பிறைச் சந்திரனாகிய, க்:சந்தி. கண்ணி-கண்ணியைச் சூடிக் கொண்டு விளங்கும். ப்:சந்தி. புரி-புரிகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். சடை யார்-சடாபாரத்தைப் பெற்றவராகிய ஆபத்சகாயேசுவர ருடைய. பொன்-தங்கத்தால் செய்த கழல்கீழ்-வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளின் நிழலின் கீழ். கழல்: ஆகுபெயர். அடை-தம்மிடம் அடைந்திருக்கும்" மாலை-இயல்பாகிய, ச்.சந்தி, சீலம்-செளகீல்யத்தை, உடைபெற்ற, அப்பூதியடிகள் தமை-அப்பூதியடிகள் நாயனாரை. தமை:இடைக்குறை. தம்: அசைநிலை, நடைசெய்யுளின் நடை. மாண-ம்ாட்சியை அடையும் வண்ணம், ச்:சந்தி, சிறப்பித்துசிறப்பை எடுத்துத் திருவாய் மலர்ததருளிச் செய்து. நன்மைபலவகையாகிய நன்மைகளை ஒருமை பன்மை மயக்கம். புரிசெய்யும். தீம்-இனிய சொற்கவை. பொருட்சுவை என்னும் சுவைகள் அமைந்த ; வினையாலனையும் பெயர். தமிழின்செந்தமிழ் மொழியில். தொடை-தொடுத்தலைக்கொண்ட. மாலை-மாலையாகிய. த்:சந்தி. திருப்பதிகம்.ஒரு திருப் பதிகத்தை. சொன்மாலை-சொன்மாலை என்று தொட்ங்கி. பாடினார்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி னார். - - - இந்தப் பாடலில் குறிப்பிட்ட திருப்பதிகம் திருப்பழனத். தைப் பற்றிப் பழந்தக்கராகப் பண்ணில் அந்தத் திருநாவுக் கரசு நாயனார் பாடியருளியது. அந்தப் பாசுரம் வருமாறு: சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லிரே பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/8
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
