பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

بين يعي. 82 பெரிய புராண விளக்கம்- ப் அடிகளும் ஆரூர் அகத்தினர் ஆயினும் அம்தவளப் பொடிகொண் டணிவார்க் கிருளொக்கும் நந்தி புறப்படிலே. ’’ அடுத்து வரும் 228-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் கங்கை யாற்றினு டைய புனல் தங்கியிருக்கும் சடாபாரத்தைத் தம்முடைய திருமுடியில் பெற்றவராகிய மனத்துணை நாதேசுவரர் நிலா வித் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவவி வலத்தையும் அந்த நாயனார் எண்ணி அந்தத் திருவலிவலத். திற்கு எழுந்தருளி கச்சு அமைந்திருக்கும் கொங்கைகளைப் பெற்றவளும் மங்கைப் பருவத்தை அடைந்தவளும் உமா தேவியுமாகிய மாதரசியைத் தம்முடைய வாமபாகத்தில் எழுந்தருளச் செய்தவராகிய அந்த மனத்துணை நாதேசுவர ருடைய வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகளை வணங்கிவிட்டு மகிழ்ச்சியை அடைந்து ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி கருமை நிறம் பொருந்தியிருக்கும் நீலமான கறையைக் கொண்ட திருக்கழுத்தைப் பெற்றவராகிய கேடி லியப்பர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் கீழ். வேளுர், திருக்கன்றாப்பூர் என்னும் சிவத்தலங்களைச் சேர்ந்து அந்தக் கேடிலியப்பரையும், நடுதறியப்பரையும் பாடியருளித் திருப்தியை அடையாத விருப்பத்தோடு திருவா ரூருக்கு மறுபடியும் அந்த நாயனார் வந்து சேர்ந்தார்." பாடல் வருமாறு: " . . . . ..., நீராரும் சடைமுடியார் நிலவுதிரு வலிவலமும் கினைந்து சென்று வாராரும் முலைமங்கை உமைபங்கர் கழல்பணிந்து மகிழ்ந்து பாடிக் காராரும் கறைக்கண்டர் கீழ்வேளுர் கன்றாப்பூர் கலந்து பாடி